டாட்டாவின் காற்றில் ஓடும் கார்...



டாட்டா நிறுவனம் ஃபிரான்ஸ் நாட்டின் Moteur Developpment International நிறுவனத்துடன் அவர்களின் தயாரிப்பான காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை இந்தியாவில் சந்தைப் படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இது பற்றி டாட்ட நிறுவனம் எந்த செய்தியினையும் வெளியிடாத நிலையில் Moteur Developpment International தனது இனையதளத்தில் இது குறித்த செய்தியினை வெளியிட்டிருக்கிறது.

இந்திய சந்தையில் இந்த காரின் விலை சுமார் ரூ.3,50,000 வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தடவை காற்று நிரப்பினால் 300 கிலோமீட்டர் வரை செல்லலாமென தெரிகிறது. காற்று நிரப்ப ஒரு முறை சுமார் ரூ.90 வரை செலவாகுமாம். இதன் ஒப்பந்தங்களின் முழுமையான விவரம் வெளியிடப்படாத நிலையிலும் இந்த அறிவிப்பு கார் பிரியர்களிடம் ஆர்வத்தினன கிளப்பியுள்ளது.

4 comments:

Machi said...

என்னது காத்துல ஓடுற காரா????
காத்தா பறக்கற காரா? இல்லை காத்துல ஓடுற காரா? கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்கப்பா.

வர்த்தகம் said...

குறும்பன்,...

அழுத்தப்பட்ட காற்றினை உந்து சக்தியாக உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரக்களுக்கு பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இனைப்பில் சென்று பாருங்கள்.

Arunram said...

Tatas are coming with new strategies. Now that they have 2 distinct embarkments, the 1 Lakh car and the Air Car. Great going!

Veera said...

TataMotors already issued a press release on 5th Feb'07 itself, and you can view on the following link:

http://www.tatamotors.com/our_world/press_releases.php?ID=281&action=Pull