எத்தனை வருடத்தில் இரட்டிப்பாகும்?

முதலீடு செய்யும் ஒவ்வொரு முதலீட்டாளரின் மனதிலும் இருக்கும் முதலும் கடைசியுமான கேள்வி, தங்கள் பணம் எத்தனை நாளில் இரட்டிப்பாகுமென்பதே......

இது முழுக்க முழுக்க. நாம் செய்யும் முதலீட்டின் வகை, தன்மை...பெறப்படும் வருவாய் அல்லது வட்டி ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்....ஓரளவிற்கு வட்டிவிகிதமோ அல்லது வருமாயின் விகிதமோ தெரியவருமாயின் பின் வரும் இரண்டு முறைகளின் மூலம் காலத்தினை கண்டறிய முடியும்.

Rule of 72
This rule says doubling period is obtained by dividing 72 by the interest rate.
If the interest rate is 10%, then your money will double in 7.2 years. It is a crude and approximate way of finding doubling period.


Rule of 69
Doubling period = 0.35 +( 69 / interest rate )
If the interest rate is 10%, then according to rule of 69
Doubling period = 0.35 + (69/10)
= 0.35+6.9
= 7.25 years
It is more accurate.

(இனையத்தில் கிடைத்த தகவலிது...பகிர்ந்து கொள்கிறேன்)

செல்போன் தொலைத்தவர்களுக்கு....

சென்னை காவல்துறையினர் தொலைந்து/களவு போன செல்பேசிகளை கண்டறிய பிரத்யேக மென்பொருளை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் காணாமல் போன செல்பேசிகளை யார் வைத்திருந்தாலும் கண்டறிந்து வருகின்றனராம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்....ஒவ்வொரு செல்பேசியிலும் IMEI என்கிற தனித்துவமான எண் ஒன்று உண்டு. இதை பத்திரமாக குறித்துவைத்துக்கொள்ளவும். களவு போனால் காவல்துறையிடம் உங்கள் புகாரில் இந்த எண்ணை குறிப்பிட்டால் தொலைபேசி எங்கிருக்கிறது என கண்டறிந்து விடுகின்றனர்.

இந்த IMEI எண் நமது செல்பேசியில் பேட்டரியின் கீழ் செல்பேசியில் பொறிக்கப்பட்டிருக்கும்,அல்லது Nokia பேசி வைத்திருப்போர் *#06# என டைப் செய்தால் இந்த எண்ணை கண்டறியலாம்.

புகார் கொடுக்க வேண்டிய முகவரி
Assistant Commissioner of Police,
CYBER CRIME CELL,
Central Crime Branch,
Egmore, Chennai - 8.

DELL சென்னையில்...


உலகின் மிகப்பெரிய கணினி உற்பத்தியாளரான டெல் நிறுவனம் வரும் ஜீன் மாதம் முதல் இந்தியாவில் தனது உற்பத்தியினை துவங்குகிறது. இந்த தொழிற்சாலை சென்னையில் அமைந்திருக்கிறது.

பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான திரு.மைக்கேல் டெல் இதனை அறிவித்தார்.இந்தியாவின் உள் நாட்டு தேவைகளை சந்திக்கும் வகையில் இந்த நிறுவனம் ஆண்டொன்றிற்கு 400,000 கணினிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தேவைக்கேற்ப உற்பத்த்யினை அதிகரிக்கவும் திட்டமிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு டெல் நிறுவனம் இந்தியாவில் 500 மில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்ததாகவும், இந்த ஆண்டு 1பில்லியனை எட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.தற்போது இந்திய சந்தையில் தங்களது நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும் அதை தக்கவைக்க பரவலான பல புதிய வகை கணினிகளை இந்திய சூழலுக்கேற்ப வடிவமைக்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.அதிலும் மிகக்குறிப்பாக மலிவுவிலை கணினிகளை பெருமளவில் சநதையில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமிருப்பதாகவும் கூறினார்.

இந்திய அரசின் அனுமதி கிடைத்தபின்னர் கணினிகளை ONLINE வாயிலாக விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு உதிரிபாகங்களின் மீதான இறக்குமதி வரியினை குறைக்கும் பட்சத்தில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக மாற வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

வணக்கம்

நண்பர்களே...

பங்குவணிகம் பற்றிய வலைப்பதிவிற்கு பேராதரவு இல்லாவிடினும், தினம் புதிய பதிவொன்றினை இடவைக்கும் ஊக்கம் தரும் நம்பிக்கையால், பங்குவணிகத்தை தாண்டிய வர்த்தக உலகம் பற்றிய இந்த பதிவினை துவங்குகிறேன்.

வர்த்தகம் என்கிற கடலில் தனியே நான் மட்டும் மீன் பிடிப்பதை விட, வர்த்தகம் பற்றிய தகவல்களையும், செய்திகளையும் தேவைகளையும் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் விதமாக அமைக்க எண்ணியுள்ளேன்.

எனவே வலைப்பதிவர்கள் தங்களின் எண்ணங்கள், தேவைகள், விமர்சனங்கள், தகவல்களை ஆக்கங்களாக vanihamm@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அந்த பதிவுகள் உங்கள் பெயரிலேயே பதிவிடப்படும்.

இந்த முயற்சியில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். வர்த்தக ரீதியில் இயன்றவரையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் வாய்ப்பு அமையுமெனில் அதைவிட மகிழ்வான விடயம் வேறெதுவுமில்லை. அதுவே இந்த வலைப்பதிவின் நோக்கமாக அமையும்.