முதல் இந்திய அலைபேசி...

முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று அலைபேசிகளை சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறது. புது தில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Intex Technologies (India) Ltd தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது.

ரூ.2000 முதல் ரூ.8000 வரையிலான விலையில் மூன்று மாடல்களை சந்தைபடுத்தியிருக்கிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் Disney குழுமத்தை சேர்ந்த Buena Vista Internet Group செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி இந்த அலைபேசிகளில் டிஸ்னி நிறுவன கார்ட்டூன் பாத்திரங்களும்,ரிங்டோன் முதலானவற்றுடன் சந்தைக்கு வருமென தெரிகிறது.

AURA I1224 Gold/Black


ரூ.7990 விலையுள்ள இந்த அலைபேசியின் மேலதிக விவரங்களை இங்கே பார்க்கலாம்.


Infi Mobile


ரூ.5450 விலையில் வரும் இந்த மாடலின் மேலதிக விவரங்கள் இங்கே...


King Mobile


ரூ.2050 விலையில் கிடைக்கும் இந்த அலைபேசியின் மற்ற விவரங்கள் இங்கே....


ஆரம்பத்தில் வட இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட இருக்கும் இந்த அலைபேசிகள் நாளாவட்டத்தில் இந்தியா முழுமைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி வர்த்தகத்தினை எதிர்ப்பாக்கும் இந்த நிறுவனம் 2010 ல் முதல் ஐந்து அலைபேசி நிறுவனங்களில் ஒன்றாக மாறுமென நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனமொன்றை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையென்றே நினைக்கிறேன்....நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....பின்னூட்டுங்கள் நண்பர்களே....

ரூ.25000 பரிசு வெல்ல....


The Smart Manager என்கிற மேலாண்மை இதழும், TCS ம் இனைந்து இந்த போட்டியினை அறிவித்துள்ளனர். அதாவது ஒவ்வொரு இதழிலும் ஏதாவது ஒரு நிறுவனத்தின் profile, history போன்றவற்றை அளித்து அதற்கான தீர்வே போட்டியாகும்.

ஆர்வமுள்ளோர் யாரும் அந்த Case studyக்கான தீர்வினை 500 வார்த்தைகளில் எழுதி போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த தீர்வு போட்டியாளரின் புகைப்படத்தோடு அவர்களின் இதழில் பிரசுரிக்கப்படும். பரிசாக ரூ.25,000 மற்றும் ஓராண்டிற்கான The Smart Managerக்கான சந்தாவும் வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்களும், மேலாண்மை துறை பற்றி உபயோகமான தகவல்கள்,நுட்பங்கள்,நுணுக்கங்களை அறியவிரும்புவோர் இந்த தளத்தினை பார்க்கவும்.

Google தொலைபேசி



கூகிள் நிறுவனம் அநேகமாக இந்த வருட இறுதிக்குள் மேலே கண்ட தொலைபேசியினை சந்தைக்கு கொண்டுவரும் என தெரிகிறது.முதல் கட்டமாக 1 மில்லியன் தொலைபேசிகள் சந்தைக்கு வருமென தெரிகிறது.

தைவானை சேர்ந்த HTC நிறுவனம் கூகிளுக்காக இந்த தொலைபேசியினை தயாரிக்கிறது. துவக்கத்தில் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப் பட்ட பின்னரே இவை அமெரிக்க சந்தையை எட்டிப் பார்க்குமென தெரிகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் GPS தொழில்நுட்பம் இந்த தொலைபேசிகளில் இருக்காது என தெரிகிறது.EDGE, 3G Platform சப்போர்ட் பண்ணுமென தெரிகிறது.Gmail and Google Search போன்றவற்றுடன் வரும் இந்த தொலைபேசி நமது சந்தைகளை எப்போது எட்டுமென தெரியவில்லை.

டாடாவின் 1 லட்சரூபாய் கார்?

இனையத்தில் கிடைத்த படங்கள் இவை....ரத்தன் டாடாவின் கணவு ப்ராஜெக்ட் ஆன ஒரு லட்ச ரூபாய் காரின் படங்களாக இருக்கலாமென என தெரிகிறது, இருப்பினும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் 'TATA Indiva' என்கிற பெயரில் இதே மாதிரியான கார் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.......தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே...!


Chevrolet Spark - புது கார்



ஜெனரல் மோட்டார்ஸ் 'SPARK' என்கிற சிறியவகை கார் ஒன்றினை இந்திய சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது.புதிய கார் என்று சொல்வதைக் காட்டிலும் Remake Car என்றே சொல்லலாம்.

இந்திய சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த daewoo matiz வகை காரின் இஞ்சினை கொண்டே இந்த வாகனம் சந்தைக்கு வந்திருக்கிறது.(சமீபத்தில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்திய Zen estilo வில் WagonR ன் இஞ்சின்தான் பொறுத்தப்பட்டுள்ளது.).

உலகம் முழுவதும் இரண்டு மில்லியன் Spark கார்கள் விற்கப்பட்ட பின்னரே இந்திய சந்தையை எட்டிப் பார்த்திருக்கிறது.ஆரம்பத்தில் இரண்டு பெட்ரோல் மாடல்கள் அறிமுகப்படுத்தி இருந்தலும் கிடைக்கும் வரவேற்பினை பொறுத்து டீசலில் இயங்கும் மாடல் விற்பனைக்கு வரலாம்.

முதல் வகையானது மாருதி800 ஐ குறிவைத்து கொண்டுவரப்படுகிறது. "795cc, 6valve-Smaller engine will pump out 38KW and torque of 68.6 Nm@4600 rpm,five-speed manual transmission driving the front wheels, the three-cylinder unit claims to give a mileage of 19.2kpl with a top speed of 142 km/hr".இதன் விலை சுமார் 3.10 லட்சம் ஆக இருக்கும்.

அடுத்த வகையானது 'Maruti Zen estilo', 'Hyundai Santro' க்கு போட்டியாக அமையும்."The 995cc, 8valve engine pumps out 48.5KW and gives a maximum torque of 87.3Nm.Chevrolet claims fuel figure as 17.85kpl with a top speed of 156Km/hr".இதன் விலை ரூ.3.90 லட்சம் வரை இருக்குமென தெரிகிறது.

"Definitely a superior package from General Motors, especially 0.8L(795cc) spark is much much superior to Maruti 800 in terms of design, safety, engine and comfort(You can avail the estilo type comfort at Maruti 800 price).1L(995cc) spark will also give sleepless nights to Maruti alto, zen estilo and Hyundai Santro."

டாட்டாவின் காற்றில் ஓடும் கார்...



டாட்டா நிறுவனம் ஃபிரான்ஸ் நாட்டின் Moteur Developpment International நிறுவனத்துடன் அவர்களின் தயாரிப்பான காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை இந்தியாவில் சந்தைப் படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இது பற்றி டாட்ட நிறுவனம் எந்த செய்தியினையும் வெளியிடாத நிலையில் Moteur Developpment International தனது இனையதளத்தில் இது குறித்த செய்தியினை வெளியிட்டிருக்கிறது.

இந்திய சந்தையில் இந்த காரின் விலை சுமார் ரூ.3,50,000 வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தடவை காற்று நிரப்பினால் 300 கிலோமீட்டர் வரை செல்லலாமென தெரிகிறது. காற்று நிரப்ப ஒரு முறை சுமார் ரூ.90 வரை செலவாகுமாம். இதன் ஒப்பந்தங்களின் முழுமையான விவரம் வெளியிடப்படாத நிலையிலும் இந்த அறிவிப்பு கார் பிரியர்களிடம் ஆர்வத்தினன கிளப்பியுள்ளது.

தீக்குச்சி மரம்...

உங்களிடம் கரடு முரடான தரிசு நிலமிருக்கிறதா...

அதில் வேறெந்த பயிரும் வளரவில்லையா...

அதனால் நிலமிருந்தும் முழுநேர விவசாயியாக இருக்க வாய்ப்பில்லாதவரா.....

அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காகத்தான்......ஆம் பெரிதாய் எந்த முதலீடும் செய்யாமல் அடுத்த ஏழாவது வருடத்தில் உங்களின் ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து உங்களுக்கு ரூ.16,00,000 வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அயிலை மரம் அல்லது பீயன்(Pecan) மரம் எனப்படும் இந்த மரம்தான் மேலே சொன்ன கற்பகதரு...உங்கள் வயலில் இரண்டரை மீட்டர் இடைவெளியில் இரண்டரை அடிக்கு குழியெடுத்து இந்த மரத்தின் கண்றுகளை நடலாம். அந்த வகையில் ஒரு ஏக்கருக்கு 400 மரங்கள் வரை நடலாம்.

தண்ணீர் பாய்ச்சனும், களை எடுக்கனும், உரம் வைக்கனும் மாதிரியான பெரிய பராமரிப்புகளோ செலவோ இல்லை. மழை இல்லாவிடினும் தாங்கிவளரும் சக்திகொண்டது. ஆடுமாடுகள் கூட இதை கடிக்காதாம்.வருடத்திற்கு இருமுறை கோழிக்கழிவு மாதிரியான இயற்கை உரங்களை வைத்தால் வளர்ச்சி வேகமாய் இருக்குமாம். மற்றொரு முக்கியமான பராமரிப்பு இதன் பக்கவாட்டு கிளைகளை வெட்டிவிட வேண்டுமாம். அப்போதுதான் மரம் உயரமாக நெடுநெடுவென வளருமென்கிறார்கள்.

ஆறில் இருந்து ஏழு வருடத்திற்குள் பனைமர உயரத்திற்கு வளரும் இந்த மரம் ஒவ்வொன்றும் இரண்டு டன் எடை வரை இருக்கும்.....சரி இதை எப்படி காசாக்குவது?...உங்க்ளுக்கு அருகாமையில் இருக்கிற தீப்பெட்டி தொழிற்சாலைகளை தொடர்பு கொண்டு சொன்னாலே போதும்...அவர்களே வந்து மரத்தை வெட்டி எடை போட்டு உங்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.ஒரு டன் மரத்திற்கு ரூ.2000 வரை தருகிறார்கள்.

ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா...ஆம், தீக்குச்சிகள் தயாரிக்கத்தான் இந்த மரம் பயன்படுகிறது.கேரள விவசாயிகள் இதன் அருமையுணர்ந்திருக்கின்றனர்...தற்போது தமிழகத்திலும் விழிப்புணர்வு வந்திருக்கிறது.

அதிகரித்து வரும் மரத்தேவைக்காக தற்போது தீப்பெட்டி நிறுவனங்களே விவசாயிகளை இந்த மரத்தினை பயிரிடச்ச்சொல்லி பணம் தருகின்றனராம். குடியாத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு செடியையும் கொடுத்து, லோன்,இன்ஸூரன்சு போன்றவைகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனராம்.

இது தொடர்பான தகவல்களை தமிழக அரசின் வனவிரிவாக்க மையங்களிலோ அல்லது தோட்டக்கலை துறையிடமிருந்தோ பெறலாம்.

சமீபத்தில் பசுமைவிகடன் பத்திரிக்கையில் இது குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பதிவெழுத தூண்டியதே அந்த செய்திகட்டுரைதான். அதில் சேலம் மாவட்டம், அக்கரம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த திரு..கணேசன் என்கிற விவசாயி இதை வெற்றிகரமாக பயிரிட்டு வருகிறாராம். அவது அலைபேசி எண் 9443518863. மேலும் தகவலுக்கு அவரை தொடர்பு கொண்டு இது குறித்த விளக்கங்களை பெறலாமென்க்கிறது பசுமைவிகடன்.

வாய்ப்பிருப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாமே....

நிரந்தர கணக்கு எண்.

PAN என்றால் என்ன? எதற்காக இது?

நிரந்தர கணக்கு எண் என அறியப்படும் பத்து இலக்க எண்தான் பான். வருமான வரிச்சட்டம் பிரிவு 139A ன் படி வருமானவரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் இந்த எண்ணை பெற்றிருத்தல் அவசியம்.

இந்த எண் மூலமாகத்தான் அரசு நம் ஒவ்வொருவரின்/நிறுவனத்தின் வரவு, செலவு மற்றும் முதலீடுகளை கண்காணிக்கிறது.ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நாம் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் நாம் அறிந்தோ/அறியாமலோ தானியக்கமாக வருமானவரித்துறை அலுவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் வரிஏய்ப்புக்கான சாத்தியங்கள் கட்டுக்குள் கொண்டு வர ஏதுவாகிறது.

இன்றைய நிலைமையில் இந்த நிரந்தர கணக்கு எண் இல்லாது நாம் எந்தவொரு முதலீடுகளையோ, பணம் தொடர்பான பரிவர்த்தனைகளையோ செய்ய இயலாது என்பதுதான் நிஜம்.

PAN எண்ணை எப்படி பெறுவதாம்?

இதற்கென ஏகப்பட்ட தரகர்கள் ஊரெங்கும் முளைத்திருந்தாலும், அவர்களை தவிர்த்துவிடுங்கள். இனையத்திலேயே நீங்கள் எந்த செலவுமின்றி நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இனைப்புகளை சொடுக்கிUTISL or NSDL விண்ணப்பிக்கலாம்.இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் நாடெங்கிலும் உள்ள UTISL அலுவலங்களில் கிடைக்கும் Form 49A படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.



யாரெல்லாம் இந்த PAN வைத்திருக்க வேண்டும்?

தற்போதைய சூழலில் அனைவரும் வாங்கி வைத்துக் கொள்வதே நலம். இருப்பினும் ஆண்டு மொத்த வருவாய் ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேலுள்ளவர்கள். ஆண்டின் மொத்த விற்றுவரவு ரூ.5,00,000 மற்றும் அத்ற்கு மேலுள்ள வர்த்தக நிறுவனங்கள். வருமானவரி சட்டம் பிரிவு 139ன் கீழ் உபபிரிவு 4A படி வருவாய் கணக்கு காட்டுவோர் என வரையரை வைத்துள்ளது.

PAN வைத்திருக்காவிட்டால் என்ன ஆகும்?

வருமானவரி சட்டம் பிரிவு 139A ன் கீழ் பிரிவு 272B(iv) படி நிரந்தர கணக்கு எண் இல்லாதவருக்கு உங்கள் பகுதி அலுவலர்(AO), ரூ.10000 வரை அபராதம் விதிக்கலாம்.

உங்கள் PAN ஐ தவறாக குறிப்பிட்டாலோ அல்லது அவ்வாறாக கண்டறியப்பட்டாலோ பிரிவு 272B(2)ன் படி ரூ.10000 அபராதம் விதிக்கலாம்.


வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு PAN அவசியமா?

PAN Circular No. 4 Dated: 11.10.2006 ன் படி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு PAN அவசியமென வலியுறுத்தப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள இனையதளத்தில் இது குறித்த தகவல்களை பெறலாம்.

PAN அட்டையில் தவறிருந்தால் எப்படி சரிசெய்வது?

இந்த இனைப்பில் அதற்கான படிவம் இருக்கிறது. இதன் மூலம் குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.

பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் மாறிய முகவரியை திருத்திக்கொள்வது அவசியம்.