நிரந்தர கணக்கு எண்.

PAN என்றால் என்ன? எதற்காக இது?

நிரந்தர கணக்கு எண் என அறியப்படும் பத்து இலக்க எண்தான் பான். வருமான வரிச்சட்டம் பிரிவு 139A ன் படி வருமானவரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் இந்த எண்ணை பெற்றிருத்தல் அவசியம்.

இந்த எண் மூலமாகத்தான் அரசு நம் ஒவ்வொருவரின்/நிறுவனத்தின் வரவு, செலவு மற்றும் முதலீடுகளை கண்காணிக்கிறது.ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நாம் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் நாம் அறிந்தோ/அறியாமலோ தானியக்கமாக வருமானவரித்துறை அலுவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் வரிஏய்ப்புக்கான சாத்தியங்கள் கட்டுக்குள் கொண்டு வர ஏதுவாகிறது.

இன்றைய நிலைமையில் இந்த நிரந்தர கணக்கு எண் இல்லாது நாம் எந்தவொரு முதலீடுகளையோ, பணம் தொடர்பான பரிவர்த்தனைகளையோ செய்ய இயலாது என்பதுதான் நிஜம்.

PAN எண்ணை எப்படி பெறுவதாம்?

இதற்கென ஏகப்பட்ட தரகர்கள் ஊரெங்கும் முளைத்திருந்தாலும், அவர்களை தவிர்த்துவிடுங்கள். இனையத்திலேயே நீங்கள் எந்த செலவுமின்றி நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இனைப்புகளை சொடுக்கிUTISL or NSDL விண்ணப்பிக்கலாம்.இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் நாடெங்கிலும் உள்ள UTISL அலுவலங்களில் கிடைக்கும் Form 49A படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.



யாரெல்லாம் இந்த PAN வைத்திருக்க வேண்டும்?

தற்போதைய சூழலில் அனைவரும் வாங்கி வைத்துக் கொள்வதே நலம். இருப்பினும் ஆண்டு மொத்த வருவாய் ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேலுள்ளவர்கள். ஆண்டின் மொத்த விற்றுவரவு ரூ.5,00,000 மற்றும் அத்ற்கு மேலுள்ள வர்த்தக நிறுவனங்கள். வருமானவரி சட்டம் பிரிவு 139ன் கீழ் உபபிரிவு 4A படி வருவாய் கணக்கு காட்டுவோர் என வரையரை வைத்துள்ளது.

PAN வைத்திருக்காவிட்டால் என்ன ஆகும்?

வருமானவரி சட்டம் பிரிவு 139A ன் கீழ் பிரிவு 272B(iv) படி நிரந்தர கணக்கு எண் இல்லாதவருக்கு உங்கள் பகுதி அலுவலர்(AO), ரூ.10000 வரை அபராதம் விதிக்கலாம்.

உங்கள் PAN ஐ தவறாக குறிப்பிட்டாலோ அல்லது அவ்வாறாக கண்டறியப்பட்டாலோ பிரிவு 272B(2)ன் படி ரூ.10000 அபராதம் விதிக்கலாம்.


வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு PAN அவசியமா?

PAN Circular No. 4 Dated: 11.10.2006 ன் படி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு PAN அவசியமென வலியுறுத்தப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள இனையதளத்தில் இது குறித்த தகவல்களை பெறலாம்.

PAN அட்டையில் தவறிருந்தால் எப்படி சரிசெய்வது?

இந்த இனைப்பில் அதற்கான படிவம் இருக்கிறது. இதன் மூலம் குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.

பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் மாறிய முகவரியை திருத்திக்கொள்வது அவசியம்.

12 comments:

said...

\\பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் கணவரின் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் உங்கள் மாறிய முகவரியை திருத்திக்கொள்வது அவசியம்\\

இதுலயாவது விட்டுவச்சீங்களே..
சந்தோஷம்....:-)

said...

என்னவோ நான் விட்டுவச்ச மாதிரி சொல்றீங்களே தாயே...ஹி..ஹி..

ஆமா நீங்க PAN வாங்கியாச்சா?

said...

Mutual fund-ல invest பண்ணனும்னா PAN தேவையா-ங்க?

said...

வாங்கிட்டேன்..ஆனா பேரு மாத்தனும்..முக்கியமான விஷயத்த சொல்லி இருக்கீங்க..நன்றி..அப்பா பேரு போட்டு அதுவும் தப்பா போட்டு இருக்காங்க..ஹ்ம்ம்..

:-))..சொன்னா டென்ஷன் ஆகக்கூடாது ..இந்த முக்கியமான விஷயத்த(அந்த form) இப்ப தான் பார்த்தேன்..

said...

பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்ய PAN அவசியம் தேவை...

said...

நான் என்னோட PAN கார்டை தொலைத்துவிட்டேன். Duplicate வாங்க என்ன செய்யவேண்டும்.?

said...

நாடோடி,

மீண்டும் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

Q32: How do I obtain a new PAN card without any changes in details?
Ans. When you have a PAN but have not received your PAN card/in case you have lost your PAN card , then you have to fill all the columns in the form for Request for New PAN Card or/and Changes or Correction in PAN data but do not have to tick any of the boxes on the left margin. In case of an individual, you have to affix a colour photograph of the size 2.5 cm X 3.5 cm.

மேலும் விவரங்களுக்கு..
http://www.tin-nsdl.com/faqPANreqfornewpan.asp

said...

Thanks.

said...

You apply duplicate pan card with same application with Rs 70 (approx) after getting confirmation you will get pan card

said...

you can apply duplicate pan card with new application stating that applying duplicate card, in that u can change name or father name or husband name with proof. the cost of duplicate pan is appox. rs. 70

said...

You apply duplicate pan card with same application with Rs 70 (approx) after getting confirmation you will get pan card

said...

You apply duplicate pan card with same application with Rs 70 (approx) after getting confirmation you will get pan card