தீக்குச்சி மரம்...

உங்களிடம் கரடு முரடான தரிசு நிலமிருக்கிறதா...

அதில் வேறெந்த பயிரும் வளரவில்லையா...

அதனால் நிலமிருந்தும் முழுநேர விவசாயியாக இருக்க வாய்ப்பில்லாதவரா.....

அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காகத்தான்......ஆம் பெரிதாய் எந்த முதலீடும் செய்யாமல் அடுத்த ஏழாவது வருடத்தில் உங்களின் ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து உங்களுக்கு ரூ.16,00,000 வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அயிலை மரம் அல்லது பீயன்(Pecan) மரம் எனப்படும் இந்த மரம்தான் மேலே சொன்ன கற்பகதரு...உங்கள் வயலில் இரண்டரை மீட்டர் இடைவெளியில் இரண்டரை அடிக்கு குழியெடுத்து இந்த மரத்தின் கண்றுகளை நடலாம். அந்த வகையில் ஒரு ஏக்கருக்கு 400 மரங்கள் வரை நடலாம்.

தண்ணீர் பாய்ச்சனும், களை எடுக்கனும், உரம் வைக்கனும் மாதிரியான பெரிய பராமரிப்புகளோ செலவோ இல்லை. மழை இல்லாவிடினும் தாங்கிவளரும் சக்திகொண்டது. ஆடுமாடுகள் கூட இதை கடிக்காதாம்.வருடத்திற்கு இருமுறை கோழிக்கழிவு மாதிரியான இயற்கை உரங்களை வைத்தால் வளர்ச்சி வேகமாய் இருக்குமாம். மற்றொரு முக்கியமான பராமரிப்பு இதன் பக்கவாட்டு கிளைகளை வெட்டிவிட வேண்டுமாம். அப்போதுதான் மரம் உயரமாக நெடுநெடுவென வளருமென்கிறார்கள்.

ஆறில் இருந்து ஏழு வருடத்திற்குள் பனைமர உயரத்திற்கு வளரும் இந்த மரம் ஒவ்வொன்றும் இரண்டு டன் எடை வரை இருக்கும்.....சரி இதை எப்படி காசாக்குவது?...உங்க்ளுக்கு அருகாமையில் இருக்கிற தீப்பெட்டி தொழிற்சாலைகளை தொடர்பு கொண்டு சொன்னாலே போதும்...அவர்களே வந்து மரத்தை வெட்டி எடை போட்டு உங்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.ஒரு டன் மரத்திற்கு ரூ.2000 வரை தருகிறார்கள்.

ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா...ஆம், தீக்குச்சிகள் தயாரிக்கத்தான் இந்த மரம் பயன்படுகிறது.கேரள விவசாயிகள் இதன் அருமையுணர்ந்திருக்கின்றனர்...தற்போது தமிழகத்திலும் விழிப்புணர்வு வந்திருக்கிறது.

அதிகரித்து வரும் மரத்தேவைக்காக தற்போது தீப்பெட்டி நிறுவனங்களே விவசாயிகளை இந்த மரத்தினை பயிரிடச்ச்சொல்லி பணம் தருகின்றனராம். குடியாத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு செடியையும் கொடுத்து, லோன்,இன்ஸூரன்சு போன்றவைகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனராம்.

இது தொடர்பான தகவல்களை தமிழக அரசின் வனவிரிவாக்க மையங்களிலோ அல்லது தோட்டக்கலை துறையிடமிருந்தோ பெறலாம்.

சமீபத்தில் பசுமைவிகடன் பத்திரிக்கையில் இது குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பதிவெழுத தூண்டியதே அந்த செய்திகட்டுரைதான். அதில் சேலம் மாவட்டம், அக்கரம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த திரு..கணேசன் என்கிற விவசாயி இதை வெற்றிகரமாக பயிரிட்டு வருகிறாராம். அவது அலைபேசி எண் 9443518863. மேலும் தகவலுக்கு அவரை தொடர்பு கொண்டு இது குறித்த விளக்கங்களை பெறலாமென்க்கிறது பசுமைவிகடன்.

வாய்ப்பிருப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாமே....

5 comments:

said...

உபயோகமான தகவல்..முதல் வேலை இது தான் இனி...

said...

/திரு..கணேசன் என்கிற விவசாயி இதை வெற்றிகரமாக பயிரிட்டு வருகிறாராம். அவது அலைபேசி /

ஆஹா... விட்டா அவரோட video conference சே arrange பண்ணிருவீங்க, போல...

தகவலுக்கு நன்றி, பங்காளி!

said...
This comment has been removed by the author.
said...

Many Thanks friend. Its very useful for my father to start de business in my native place.

Thanks,
Bala,
Oracle Corp.

said...

உடனே ஊருப்பக்கம் போய் தரிசு நிலம் இருக்குதான்னு பார்க்கனுமே... ;-) பாத்துட்டு திரும்பவும் வருவேன். தொடர்ந்து எழுதுங்க. நன்றி!