கடன் கொடுத்தால்...வாங்குவார் இல்லை!

மாற்றுப்பயிர் சாகுபடிக்கு அதிக அளவில் வங்கிக்கடன் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.ஆனால் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாற்றுப்பயில் சாகுப்படியில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. யாருக்காவது ஆர்வம் இருந்தால் என்னை அணுகலாம்.

-இப்படி அழைப்பு விடுப்பவர் "நாபார்ட்" வங்கியின் உதவிப்பொது மேளாளர் திரு.பாஸ்கரன்.

அன்மையில் தஞ்சையில் நடைபெற்ற மாற்றுப்பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கில் பேசும் போதுதான் இத்தகைய தகவலை தெரிவித்தார்.இதே கருத்தரங்கில் பேசிய பி.எம்.டி வேளான் அறிவியல் மையத்தினை சேர்ந்த தமிழ் செல்வி மாற்றுப்பயிர் சாகுபடி குறித்தான பயிற்சியினை தங்கள் நிறுவனம் வழங்குவதாக கூறினார்.

வேளான் உதவி இயக்குனர் திரு.லோகநாதன் தனது பேச்சில்,"விழிப்பு உணர்வு ஊட்டினால் மட்டும் போதுமா...மாற்றுப்பயிர்களான மக்காச்சோளம், சூரியகாந்தி,எண்ணண பனை போன்றவற்றின் விதைகளுக்கு எங்கே போவது? என விவசாயிகளுக்கு சந்தேகம் எழும்.விதைகளையும் உரங்களையும் இலவசமாக கொடுக்க நாங்கள் தயார்.ஆனால் விவசாயிகள் ஆர்வம் காட்டினால்தான் எங்களுக்கு இது தொடர்பாக பேச ஆர்வம் ஏற்படும். அப்போதுதான் இன்னும் அதிக அளவில் விவசாயிகளுக்கு உதவ முடியும்" என ஆதங்கப்பட்டார்.

தொடர்புக்கு :4362221474

தரவு - பசுமை விகடன்

2 comments:

said...

//மாற்றுப்பயிர்களான மக்காச்சோளம், சூரியகாந்தி,எண்ணண பனை போன்றவற்றின் விதைகளுக்கு எங்கே போவது? என விவசாயிகளுக்கு சந்தேகம் எழும்.விதைகளையும் உரங்களையும் இலவசமாக கொடுக்க நாங்கள் தயார்.ஆனால் விவசாயிகள் ஆர்வம் காட்டினால்தான் எங்களுக்கு இது தொடர்பாக பேச ஆர்வம் ஏற்படும்.//

தஞ்சை , திருவாரூர், நாகை மாவட்ட மண் வகை மேற் சொன்ன பயிர்களுக்கு ஏற்றதல்ல, மக்கா சோளம், சூரியகாந்திக்கு தண்ணீர் தேங்காத ,செம்மண் வகை தேவை, அங்கே உள்ளதோ களிமண் நீர் வடியாமல் தேங்கி விடும். பயிர் அழுகல் தான் ஏற்படும்.

இதை விட பெரிய காமெடி , எண்ணைப்பனை போட சொல்வது தான், காரணம் எண்ணைப்பனையிலிருந்து விதைகளை அறுவடை செய்த 24 மணி நேரத்திற்குள் அவற்றைப்பயன்படுத்த வேண்டும், இல்லை எனில் பலன் தராது. தமிழ் நாட்டில் எண்ணைப்பனையிலுருந்து எண்ணை எடுக்க இதுவரை ஆலையே இல்லை பின் எப்படி அதனை சாகுபடி செய்வதாம்.

ஏற்கனவே நாகை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் எண்ணைப்பனை போடு மேற்சொன்ன காரணத்தால் பலர் நட்டம் அடைந்துள்ளார்கள். இது குறித்து ஜூ.வி யில் கூட செய்தி வந்துள்ளது.

மேலும் நபார்டு வங்கி தனி நபர்களுக்கு கடன் அளிக்காது அதன் சட்டம் அப்படி பின்னர் எப்படி விவசாயிகளுக்கு கடன் தருவதாக சொன்னார்கள் , சந்தேகம் இருப்பின் நுங்கம்பாக்கத்தில் உத்தமர் காந்தி சாலையில் தான் நபார்டு வங்கி உள்ளது விசாரித்துப்பார்க்கவும்

said...

சரியான உண்மைகள் எது?

www.padugai.com

thanks