செல்போன் தொலைத்தவர்களுக்கு....

சென்னை காவல்துறையினர் தொலைந்து/களவு போன செல்பேசிகளை கண்டறிய பிரத்யேக மென்பொருளை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் காணாமல் போன செல்பேசிகளை யார் வைத்திருந்தாலும் கண்டறிந்து வருகின்றனராம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்....ஒவ்வொரு செல்பேசியிலும் IMEI என்கிற தனித்துவமான எண் ஒன்று உண்டு. இதை பத்திரமாக குறித்துவைத்துக்கொள்ளவும். களவு போனால் காவல்துறையிடம் உங்கள் புகாரில் இந்த எண்ணை குறிப்பிட்டால் தொலைபேசி எங்கிருக்கிறது என கண்டறிந்து விடுகின்றனர்.

இந்த IMEI எண் நமது செல்பேசியில் பேட்டரியின் கீழ் செல்பேசியில் பொறிக்கப்பட்டிருக்கும்,அல்லது Nokia பேசி வைத்திருப்போர் *#06# என டைப் செய்தால் இந்த எண்ணை கண்டறியலாம்.

புகார் கொடுக்க வேண்டிய முகவரி
Assistant Commissioner of Police,
CYBER CRIME CELL,
Central Crime Branch,
Egmore, Chennai - 8.

3 comments:

மங்கை said...

வாழ்த்துக்கள்....

இங்க இது வரைக்கும் நான் 4 செல் ஃபோன் தொலச்சு இருக்கேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வர்த்தகமா அப்படின்னா பணத்த
சம்பாதிக்கவும் தெரியாது செலவழிக்கவும்
சரியா தெரியாது...சரி அருளாசி தரச்
சொன்னதால வந்தா..இங்கே இப்படி வேறயா..என்னமா மங்கை வாழ்த்துக்கள் எதுக்கு செல்போன் தொலைச்சவங்களுக்கா...

4 போனா இதெல்லாம் அநிநாயாம் !

தென்றல் said...

என்னங்க, பங்காளி...
பதிவைவிட பின்னுட்டம் interstingஆ இருக்கே.

/களவு போனால் காவல்துறையிடம் உங்கள் புகாரில் இந்த எண்ணை குறிப்பிட்டால் தொலைபேசி எங்கிருக்கிறது என கண்டறிந்து விடுகின்றனர்.
/
தொலைபேசி கண்டுபிடிச்சி நம்மகிட்டயே குடுப்பாங்களா.. ;)இல்லயா??