உலகின் மிகப்பெரிய கணினி உற்பத்தியாளரான டெல் நிறுவனம் வரும் ஜீன் மாதம் முதல் இந்தியாவில் தனது உற்பத்தியினை துவங்குகிறது. இந்த தொழிற்சாலை சென்னையில் அமைந்திருக்கிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான திரு.மைக்கேல் டெல் இதனை அறிவித்தார்.இந்தியாவின் உள் நாட்டு தேவைகளை சந்திக்கும் வகையில் இந்த நிறுவனம் ஆண்டொன்றிற்கு 400,000 கணினிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தேவைக்கேற்ப உற்பத்த்யினை அதிகரிக்கவும் திட்டமிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு டெல் நிறுவனம் இந்தியாவில் 500 மில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்ததாகவும், இந்த ஆண்டு 1பில்லியனை எட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.தற்போது இந்திய சந்தையில் தங்களது நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும் அதை தக்கவைக்க பரவலான பல புதிய வகை கணினிகளை இந்திய சூழலுக்கேற்ப வடிவமைக்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.அதிலும் மிகக்குறிப்பாக மலிவுவிலை கணினிகளை பெருமளவில் சநதையில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமிருப்பதாகவும் கூறினார்.
இந்திய அரசின் அனுமதி கிடைத்தபின்னர் கணினிகளை ONLINE வாயிலாக விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு உதிரிபாகங்களின் மீதான இறக்குமதி வரியினை குறைக்கும் பட்சத்தில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக மாற வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
DELL சென்னையில்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
/ONLINE வாயிலாக விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், /
நல்ல செய்திதான்!
Post a Comment