அப்பன்திருப்பதி தரும் இய்ற்கை உரம்


விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கை உரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உரங்களை பதப்படுத்தி, பக்குவப்படுத்தி தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனாலேயே செயற்கை உரங்களை நம்மூர் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இவற்றால் வயல்களுக்கும், பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

இயற்கை உரத்தின் அவசியத்தை உணர்ந்துள்ள வெளிமாநிலத்தவர்கள் நம்மூர் கிராமப் பகுதிகளில் கிடைக்கும் பதப்படுத்திய மாட்டுச் சாணத்தை வாங்கிச் செல்கின்றனர்.மதுரை அழகர்கோவில் நெடுஞ்சாலையில் உள்ளது அப்பன்திருப்பதி. அப்பன்திருப்பதி அருகே உள்ள மாத்தூர் பகுதியில் சிலர் கூடாரம் அமைத்து தங்கி உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் உள்ள ஆயிரக்கணக்கான மாடுகளை அருகில் உள்ள வயல்வெளிகளில் கிடைகள் அமைக்கின்றனர்.

இதில் கிடைக்கும் மாடுகளின் சாணத்தை சேகரித்து எருவாக மாற்றுகின்றனர். இதனை வெயிலில் உலர வைத்து, பதப்படுத்தி பவுடராக்குகின்றனர். பின்னர் சில நாட்கள் அதனை மண்ணில் மூடி வைத்து, சாக்கு மூடைகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு தயாராக்குகின்றனர். தோட்டங்களுக்கு சிறந்த உரமாக இருப்பதால் கேரளாவில் உள்ள டீ எஸ்டேட் உரிமையாளர்கள் லோடு கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். இதே போல் கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் தொழிலதிபர்கள் மாத்தூர் வந்து இயற்கை உரங்களை டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

தகவல் - தினமலர்

1 comments:

said...

சுவிற்சலாந்தில் இயற்கை பசளை உக்க நாளாகும். இதனால் அவர்கள் மாட்டுச்சாணத்தை நீரில் கரைத்து பயிர்களிற்கு தண்ணீராக விடுவார்கள். என்னிடமும் வீட்டுத்தோட்டமுண்டு நானும் அப்படியே செய்வேன்.தோட்டத்து ஒரு பகுதி மூலையில் இத்தகைய சாணம் இலை தழைகளை உக்க வைப்போம்.