நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது - ஒய்.வி.ரெட்டி

உலக நாடுகளின் பொருளாதார நிலையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான அளவில் வளர்ச்சி காணும். நடப்பு 2007-08-ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டீ.பி) 8.5 சதவீத அளவிற்கு இருக்கும். அதேபோன்று நாட்டின் பணவீக்க விகிதம் 5 சதவீத அளவிற்குள் கட்டுக்குள் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கியின் (ஆர்.பீ.ஐ) கவர்னர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி

சென்னையில் கிரேட் லேக்ஸ் நிர்வாக இயல் பயிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி மேலும் கூறும்போது, "உலகில் பல நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக ஏற்ற, இறக்கம் காணப் படுகிறது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், உள்நாட்டு கடன் சந்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி, சர்வதேச பொருளாதார நடவடிக்கை களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில், உலக பொருளாதாரத்திற்கு வழி காட்டும் நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இருப்பினும், உலக பொருளாதார நடவடிக்கைகளையும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் நாம் கவனிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முதலீடுகள்

இதர நாடுகளில் 40 சதவீத அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடு 30 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இந்நிலையிலும், இதர நாடுகளையும் விஞ்சிடும் அளவில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, முதலீடுகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், மத்திய அரசு, நாட்டின் பணவீக்க விகிதத்தை 3 சதவீத அளவிற்கு வைத்துள்ளது. இது, இதர சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும்.

பணவீக்க விகிதம்

பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்க விகிதம் 2007-ஆம் ஆண்டு ஏப்ரலில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இது, 2007-ஆம் ஆண்டு ஜுலை 14-ந் தேதியன்று 4.4 சதவீதமாக குறைந்திருந்தது. டிசம்பர் 1-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இது 3.75 சதவீதமாக உள்ளது.

நாட்டில் பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் உணவு தானியங்களின் விலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பதற்கு மேற்கண்ட இரண்டு பொருள்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என ரெட்டி குறிப்பிட்டார்.

வேளாண் துறை

அவர் மேலும் கூறும்போது, "பணம் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. பல்வேறு துறைகளின் வளர்ச்சியை பொறுத்தே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைகிறது. உள்நாட்டிற்குள் வரும் முதலீடுகள் மிகவும் அதிகரித்து வருகிறது. அடிப்படை கட்டுமானம், மருத்துவம், கல்வி மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. இவை, நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய அம்சமாக திகழ்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். எனவே, வேளாண் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது இன்றியமையாததாகும்" என்று தெரிவித்தார்.

நிதி உதவி

இந்தியா மற்றும் சீனாவில் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டிற்கும் மேல் வந்துள்ளனர். வேளாண் துறையில், அளப்பிற்கும், தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி நாட்டின் பொருளாதாரத்திற்கு தடைக்கல்லாக உள்ளது. எனவே, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. இதனை கருத்தில் கொன்டு, கடந்த ஒரு சில மாதங்களாக வேளாண் துறைக்கு வழங்கப்படும் கடன் களின் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மேம்பாட்டு கவுன்சில், எதிர்கால உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது என ரெட்டி மேலும் தெரிவித்தார்.

-இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு,சென்னை
தரவு - தினதந்தி

மானியங்களை ரத்து செய்ய பிரதமர் யோசனை?

கடந்த ஒரு ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி வரை மானியமாக வழங்கப்பட்டும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன்சிங், பலன் கிடைக்காத மானியங்களை ரத்து செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி மையத்தின் பொன்விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது-

மானியம் ரத்து?

"மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மானியம் வழங்கி வருகிறோம். நடப்பு நிதியாண்டில் இந்த மானியம் ரூ.1 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இப்படி மானியம் வழங்குவதன் மூலம் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.

மானியங்கள் ஏழைகளை சென்று அடையவில்லை என்றால், மானியம் வழங்குவதன் உண்மையான நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, எதிர்பார்க்கும் பலன் கிடைக்காத மானியங்களை ரத்து செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

புதிய கொள்கை

நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உள்ள கிராம மக்களுக்கு விவசாயத்துறையினால் மட்டும் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே விவசாயம் சாராத துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கொள்கைகளை வகுப்பது அவசியமாகும். கிராமங்கள்- நகரங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே வளர்ச்சி விகிதத்தில் இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி விகிதத்தை நிலையாக வைத்திருக்க முதலீடு மற்றும் சேமிப்பு விகிதங்களை அதிகரிக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேவை விவசாயமா? தொழில் துறையா? என்ற விவாதம் அல்ல. விவசாயம், தொழில் மற்றும் கிராமம், நகரம், நாடு என ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான புதிய கொள்கை அவசியம்.''

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

தரவு - தினதந்தி

விரைவில் வருகிறது "ரிலையன்ஸ் வெல்னஸ்'

சுத்தமான சுகாதாரமான வாழ்விற்கு உத்தரவாதம் தரும் பல சிறப்பான பொருட்கள் எங்கே, என்ன விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் உலகப்புகழ் ரிலையன்ஸ் நிறுவனம் புதுமையான "ரிலையன்ஸ் வெல்னஸ்' என்ற ஷோரூமை இந்தியா முழுவதும் 31 நகரங்களில் திறக்க உள்ளது.

இதில் வைட்டமின் சத்து மாத்திரைகள் முதல் உயர்தர புரத சத்து உணவுகள் வரை, நவநாகரீக பெண்களுக்கான ஆயுர்வேத அழகு பொருட்கள் முதல் கலர் கலரான மூக்கு கண்ணாடிகள் வரை அனைத்தும் கிடைக்கும்.

"கனவிலும் நினைத்து பார்க்க முடியாதவற்றையும் நினைத்துப் பார்; அதை அமுலாக்க வியர்வை சிந்த வேலை செய்; அந்தகனவு மெய்ப்படும்'' இது ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் உபதேசமாகும். அந்த வழியில் திருபாய் அம்பானியின் அடிச்சுவட்டில் அவரது மூத்த மகன் மூகேஷ் அம்பானி பொது மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக பயன்படும் விதத்தில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் "ரிலையன்ஸ் ரீடைல்' நிறுவனம் துவக்கி முக்கிய நகரங்களில் ரிலையன்ஸ் பிரஷ் கடைகளை திறந்தார். அங்கு வீட்டு உபயோக மளிகை பொருட்கள் தரமான தரத்தில் நியாயமான விலையில் விற்பனை செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

அதன் வெற்றி மகத்தான ஒன்றாக அமையவே மின்சார, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்ய டெல்லியில் பிரத்யேக மையம் ஒன்றை நிறுவினார்.

பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்பென்சர்ஸ் போன்ற பழமையான நிறுவனங்கள் நடத்தி வந்த "ஷாப்பிங் மால்கள்' பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தபோதிலும் அவை முழுமையாக இல்லாதிருப்பதை கண்டு உலகப்புகழ் ஷாப்பிங் மால்களுக்கு சவால் விடும் வகையில் மிகப் பிரம்மாண்டமான "ரிலையன்ஸ் ஹைப்பர் மார்ட்' ஷாப்பிங் உலகை ஆமதாபாத்தில் நிறுவினார்.

இதுபோன்ற பெரிய ஷாப்பிங் கடைகளுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் குறை நிறைகளை கேட்டறிந்த பின் சுகாதார வாழ்விற்கு உறுதி தரும் பல பொருட்கள் வெவ்வேறு இடங்களில் மட்டுமே கிடைப்பதை கண்டு மக்களுக்கு உதவிடும் வகையில் அனைத்து மருத்துவ நலன்கள் கொண்ட பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க பிரத்யேகமாக ஷோரூம் ஒன்றை நிறுவ திட்டமிட்டார்.

டாக்டர் சீட்டு மருந்து விற்பனை இல்லை
அந்த கனவு நிறைவேற மேற்கொண்ட முயற்சிகள் இன்று வெற்றி பெற்று விட்டது. இந்த வரிசையில் முதல் கடையை சுமார் 15,000 சதுர அடியில் ஐதராபாத்தில் "ரிலையன்ஸ் வெல்னஸ்' என்ற பெயரில் துவக்கினார்.

இந்த கடையின் சிறப்பு என்னவென்றால், இங்கு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட பல்வேறு எண்ணைகள், களிம்புகள், உணவு பதார்த்தங்கள், போஷாக்கு மாவுகள், ஜூஸ் வகைகள், ஊக்க சத்து பானங்கள், விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக உணவு மற்றும் பான வகைகள், மருந்து மாத்திரைகள் என பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையில் உள்ளது. மருந்து பொருட்கள் விற்பனையில் இருந்தாலும், டாக்டர்கள் தரும் மருந்து சீட்டு கொண்டு சென்று வாங்கப்படும் மருந்துகள் இங்கு விற்பனையில் இல்லை.

இந்த கடையில் குறிப்பிட்ட நேரத்தில் வல்லுநர்கள் வந்து பொது மக்களிடம் உரையாடி அவர்களின் பல சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.

இலவச கண் பரிசோதனை
கண் பரிசோதனை மையமும், விதவிதமான கண்ணாடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கம்ப்யூட்டர் மூலம் கண் பரிசோதனை இலவசமாகவும் செய்யப்பட்டு, எந்தவித கண்ணாடி வேண்டுமோ அதை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று இந்நிறுவன தலைமை செயல் இயக்குனர் மற்றும் பிரசிடெண்ட் நினு கன்னா தெரிவித்தார்.

6 மாதத்தில் சென்னையில் அண்ணாநகரில் திறக்கப்படும்
முதல் கடையை வெற்றிகரமாக விற்பனைக்கு திறக்கப்பட்ட பின் பத்திரிகை யாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் 6 மாதத்தில் இதுபோன்ற கடையை சென்னையிலும் திறக்க இருப்பதாக தெரிவித்தார்.

அண்ணா நகர் அருகாமையில் கட்டப்படும் இந்த கடை உலக தரத்தில் மக்களுக்கு வேண்டிய பொருட்கள் எங்கே உள்ளது என்பதை கண்டறிந்து எடுத்துக் கொள்ளும் வகையில் அமைத்து வருகிறார்கள்.

3 ஆண்டுகளில் 31 நகரங்களில் 1300 மருந்து ஷோரூம்கள்
இதுபோன்ற "வெல்னஸ்' கடைகள் இந்தியா முழுவதும் 31 நகரங்களில் 1300 கடைகளை அடுத்த மூன்று ஆண்டுகளில் துவக்க இருப்பதாக தெரிவித்தார்.

எங்கும், எதிலும் பிரம்மாண்டம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனம், பொது மக்களின் சுகாதார வாழ்விற்கு அச்சாணியாக திகழ இந்த கடைகளை உலகில் யாரும் செய்யாத வகையில் வடிவமைத்து நிர்மாணிக்க உள்ளது.

சிறுவர், சிறுமிகளை கவரும் நோக்குடன் இக்கடையில் பல வகையான ஸ்கிப்பிங் கயிறுகள், இனிப்பு பதார்த்தங்கள், பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இக்கடையின் இன்னொரு சிறப்பு மலிவு விலையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

விலையில் தள்ளுபடி ரிலையன்ஸ் சிறப்பு
குளுகுளு வசதி, நிபுணர்களின் ஆலோசனை எல்லாம் தரும் அதே நேரத்தில் அவை இலவசம் என்று சொல்லி விட்டு விற்பனை செய்யும் பொருட்களை அதிக விலையில் விற்பார்களோ என்று விலை பட்டியலை பார்த்தால், இன்ப அதிர்ச்சி தரும். அனைத்து பொருட்களும் எம்ஆர்பி விலையிலோ அல்லது விசேஷ தள்ளுபடி விலையிலே தான் விற்கப்படுகிறது.

கரும்பு தின்ன கூலி தரும் ரிலையன்ஸ்
தரமான பொருட்களை நியாய விலையில் மிக நவநாகரீக சூழலில் வாங்கி மகிழலாம். அவை பல நேரங்களில் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. "கரும்பு தின்ன கூலியா?' என்று கேட்டபடி அந்த கடையை நோக்கி இல்லத்தரசிகள் படை எடுக்காமலா போய் விடுவார்கள்?

மக்களுக்காக உயர்தரம், மலிவு விலையில் என்ற கொள்கை அடிப்படையில் இக்கடைகளை நிறுவி வரும் முகேஷ் அம்பானி நுகர்வோரின் கனவையும், நினைவாக்கி விட்டார் என்பது உண்மையே.

உடல் எடையை குறைக்க கூட்ட ஆலோசனை

"ரிலையன்ஸ் வெல்னஸ்' உடல் அழகு, ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளுக்கு தேவையான பல்வேறு பொருட்கள், சாதனங்களை ஒரு இடத்தில் கொண்டுள்ளது. உலகப்புகழ் மற்றும் இந்திய புகழ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை, சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கும்.

உடல் எடை குறைந்தவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க சத்துணவு இங்கு கிடைக்கும். உடல் எடையை குறைப்பவர் களுக்கு ஆரோச்கிய ஆலோசனைகளுடன் "டயட்' உணவு, மாத்திரைகள் உண்டு. உடல் எடை குறைக்க உடற்பயிற்சி சாதனங்களும் விற்பனைக்கு உண்டு.

விளையாட்டு வீரர்கள், உடல் அழகு கொண்டவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி சாதனங்கள் இங்கு உண்டு.

அழகு பொருள், மூக்கு கண்ணாடி
இத்தாலிய உணவு வகையான தால்கோ "எச்'23' புளரன்ட் கிங்டம், சர்கோ பார்மா, நியூட்டிரிசன், நியூட்ரோ, ஜீரோ, மஜில்டெக், விளையாட்டு சத்துணவு போன்றவை பல்வேறு ரகங்களில் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம், அழகு, மூக்கு, கண்ணாடி, மருந்துகள் போன்றவைகளும் கிடைக்கும். வழக்கமான மருந்துகளுக்கு மாற்று எளிமையான மருந்துகளும் இங்கு உண்டு.

ரிலையன்ஸ் வெல்னஸ் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்குகிறது. இது டாக்டர் எழுதும் மருந்து சாப்பிட ஆலோசனைகளை சொல்லி இருப்பார். ஒரு மாதம் மருந்து வாங்கி விட்டால், அடுத்த மாதம் மருந்து வாங்கலையா? என்று நினைவூட்டும் வசதியை ரிலையன்ஸ் வெல்னஸ் மார்ட் வழங்கும்.

உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், கருத்தரங்குகள், ஆலோசனை முகாம், மருத்துவ முகாம் போன்றவை நடத்தப்படும்.

தரவு- மக்கள்குரல்

10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி

சென்ற வெள்ளிக்கிழமையன்று மேலும் 10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடைமுறைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சரவை சில கொள்கைகளை வகுத்த பின்னர் முதன் முறையாக 10 சிறப்பு பொருளாதார மண்ட லங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாட்டா கன்சல்டன்சி
இந்த 10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுள், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலமும், அதானி குழுமம் குஜராத் மாநிலம் முந்த்ராவில் 1,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்க திட்டமிட்டுள்ள பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலமும் அடங்கும்.

சலோனி பிசினஸ் பார்க் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள உயிரி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், தமிழகத்தில் ரகின்டோ கோவை டவுன்ஷிப் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், மால்வா ஐ.டி. பார்க் நிறுவனம் மத்திய பிரதேசத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், தமிழ்நாட்டில் ஜாஃப்சா சென்னை பிசினஸ் பார்க்ஸ் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
எனினும் டீ.எல்.எஃப். மற்றும் ïனிடெக் ஆகிய நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிறு வனங்களும் தேவையான நிலத்தை கைவசம் வைத்திராததால், தற்போது அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

பிரிவிலேஜ் பவர் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத் தின் திட்டங்களுக்கு கொள்கையளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் வென்ச்சர்ஸ் நிறுவனம் மின்னணு மற்றும் மின்சார உபகரணங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. செங்காடு புராஜக்ட்ஸ் நிறுவனம் பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள இவ்விரு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் கொள்கையளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

பணவீக்க விகிதம் 3.07 சதவீதமாக சரிவு

நாட்டின் பணவீக்க விகிதம் அக்டோபர் 6-ந் தேதி�டன் நிறைவடைந்த வாரத்தில் 0.19 சதவீதம் குறைந்து 3.07 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஐந்து ஆ�டுகளில் மிகவும் குறைந்த அளவாகும். நாட்டின் பணவீக்க விகிதம் இதற்கும் முந்தைய வாரத்தில் 3.26 சதவீதமாக இருந்தது.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ள�பட்ட வாரத்தில், பழங்கள், காய்கறிகள், முட்டை, நவதானியங்கள், மீன் மற்றும் தயாரி�பு பொருள்களின் விலை குறைந்து காண�பட்டது. அதேசமயம், விமான எரிபொருள் விலை அதிகரித்து இருந்தது.

பணவீக்க விகிதம், பாரத ரிசர்வ் வங்கியின் நட�பு நிதி ஆ�டுக்கான மதி�பீட்டு அளவான 5 சதவீதத்திற்கு மிகவும் குறைவாக உள்ளது என்பது குறி�பிடத்தக்கது.

நாட்டின் பணவீக்க விகிதம் சென்ற ஆ�டின் இதே காலத்தில் 5.36 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்து இருந்தது.

தரவு - இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு/தினதந்தி

பங்குச் சந்தை... அதிருதுல்ல...!

-சேதுராமன் சாத்தப்பன்

இறங்குமா... இறங்கிடுச்சுன்னா... என்ற பதைபதைப்புடன் ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையை உற்று நோக்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தான் அதிகம். இது பயமா அல்லது எச்சரிக்கையுடன் அணுகுகிறார்களா என்பது புரியாத புதிர். பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தால், எப்போத்தான் ஏறுமோ என அங்கலாய்ப்பதும். ஏறிக் கொண்டே இருந்தால், பாரு சட்டுன்னு ஒரு நாளைக்கு அடிவாங்கத்தான் இப்படி ஏறிக்கொண்டு இருக்கும் என பலரும் புலம்புவதை கேட்க முடியும்.

இந்த மாதிரி புலம்புபவர்கள் எல்லாருமே பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பங்குச் சந்தையை பணம் காய்க்கும் மரம் என நினைத்து வந்து ஏமாந்தவர்களாக இருப்பார்கள். உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் நன்றாக இருப்பதும், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் நன்றாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை. பங்குச் சந்தையை நீண்ட கால முதலீடாக பார்ப்பவர்களுக்கு இது அமுதசுரபி என்றால் அது மிகையில்லை.

இதுவரை பங்குச் சந்தையில் ஈடுபடாதவர்கள் நாமும் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு பங்குச் சந்தை உச்சத்தில் போய் நிற்கிறது. வாரம் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது. இந்த வாரம் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது ஒரு புதிய அளவாகும். பதினைந்து வருடங்களுக்கு முன், பங்குச் சந்தை பங்கு நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள 'ஸ்டாக் எக்சேஞ்சு'க்கு சென்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதலால், ஆர்வமுள்ளவர்கள் பங்குச் சந்தைகளுக்கு முன் கூடி நிற்பர். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வீட்டில் இருந்தபடியே நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்; வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற நிலை வந்தவுடன் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். குஜராத் போன்ற மாநிலங்களில் காய்கறி விற்பவர்களில் இருந்து பால்காரர் வரை பங்குச் சந்தை நிலவரம் பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். மும்பை பங்குச் சந்தை தன்னுடைய நடவடிக்கைகளை, நிலவரங்களை தற்போது குஜராத்தி மொழியிலும் வெளியிட ஆரம்பித்துள்ளது.

இந்த வார முக்கிய நிகழ்வாக டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளை சொல்லலாம். சென்ற வாரம் வெளிவந்த இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகளை வைத்து பார்த்தபோது டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அந்த கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு எதிராக நன்றாக இருந்ததால், பங்குச் சந்தையை தூக்கிச் சென்றது. தொடர்ந்து வந்த சில கம்பெனிகளின் (எல் அண்டு டி ரான்பாக்கி மற்றும் டி.எல்.எப்.,) முடிவுகளும் அதுபோலவே இருந்ததால் வாரம் முழுவதும் பங்குச் சந்தை களை கட்டியிருந்தது.

திங்களன்று துவக்கமே சிறிது ஏற்றத்துடன தான் ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் மேலே சென்றது. கன்ஸ்ட்ரக்ஷன் பங்குகள் மேலே சென்றன. திங்களன்று மாலை வெளிவரும் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயமும் சந்தையில் சிறிது தெரிந்தது.

மூன்று தினங்களாக மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, செவ்வாயன்று சந்தை ஒரு குறைந்த மூடிலேயே இருந்தது. அன்றைய தினம் மேலும், கீழுமாக சென்று கொண்டிருந்த சந்தை முடிவாக 21 புள்ளிகள் சரிந்தது. நல்ல ரிசல்ட்டால் டி.சி.எஸ்., கம்பெனியின் பங்குகள் மேலே சென்றது.

செவ்வாய்க்கிழமை போலத் தான் இருந்தது புதன் கிழமையும். ஒரு 'டல்'லான நாளில் 11 புள்ளிகள் மட்டுமே மேலே சென்றது.

ரான்பாக்சி மற்றும் எல்.டி., கம்பெனிகளின் அருமையான காலாண்டு முடிவுகள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக கிடைத்த காஸ் விலை சம்பந்தப்பட்ட கோர்ட் தீர்ப்பு ஆகியவை பங்குச் சந்தையை வியாழனன்று தூக்கிச் சென்றது. முடிவில் 248 புள்ளிகள் அதிகமானது. 67 பங்குகள் புதிய அளவை எட்டின.

வெள்ளியன்று, வியாழனின் மூடிலேயே பங்குச் சந்தை துவங்கியது. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த பங்குச் சந்தை முடிவாக 15 புள்ளிகள் அதிகமாகி முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,566 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது ஒரு சாதனை அளவாகும். சாதனைகள் ஏற்படுத்தப்படுவதே முறியடிப்பதற்காக தானே. மக்களிடம் அபரிமிதமாக புழங்கும் பணம், அவர்களின் மூடு ஆகியவை பங்குச் சந்தையை மேலே கொண்டு செல்லலாம். அடுத்த வாரம் பல புதிய வெளியீடுகள் வருகிறது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய வெளியீடு வருகிறது. இது ஒரு பெரிய வெளியீடு ஆகும். ஆதலால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மார்க்கெட்டில் தற்போது இந்த வெளியீட்டுக்கு 30 முதல் 36 வரை பிரிமீயம் கிடைப்பதாக செய்திகள் வெளிவருகின்றது. முதலீடு செய்யலாம். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 'எவரான்' என்ற நிறுவனம் புதிய வெளியீடைக் கொண்டு வந்தது. அந்த வெளியீடு 125 தடவைக்கு மேல் உடன்பாடு செய்யப்பட்டு ஒரு சாதனை படைத்தது.

'ஸ்பைஸ் டெலிகாம்' புதிய வெளியீடு இந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்டது. ரூ.46 க்கு வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாள் 62 வரை விற்கப்பட்டது. பரவலாக போட்டவர்கள் எல்லாருக்கும் கிடைத்த வெளியீடு இது. ஆதலால், எல்லாரும் லாபம் அடைந்தனர். வெள்ளியன்று முடிவடைந்த 'ஓமேக்ஷ்' என்ற டில்லியைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புதிய வெளியீடு 70 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டு உள்ளது. பங்குகள் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சமீப காலமாக யாரும் வேண்டாத கன்ஸ்ட்ரக்ஷன், சிமென்ட் போன்ற துறைகள் மறுபடியும் விருப்பமான துறைகளாக கருதப்படுகிறது.

இத் துறைகளின் பங்கு விலைகள் கூடிக் கொண்டே போகிறது. சந்தை மிகவும் கீழே இறங்குமா? இது ஒரு பெரிய கேள்விக் குறிதான். இந்திய பங்குச் சந்தை உலகச் சந்தைகளின் போக்கிலேயே போவதால், உலகளவில் ஏதேனும் கரெக்ஷன் வருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும். அதுவரை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும்'நிப்டி' க்கும் 'நிப்டி பியூச்சரு'க்கும் புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பங்குச் சந்தை ஆட்டம் காண்பதற்கு அறிகுறியாக இருக்கலாம் அனுபவஸ்தர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். சீனா வட்டி வீதங்களை கூட்டி உள்ளது என்ற செய்தி வெள்ளியன்று சந்தை முடிவடைந்த பிறகு வந்த செய்தி. மேலும், பண வீக்கம் 4.27 சதவீத அளவில் உள்ளது என்பதாகும். இவை பங்குச் சந்தையை திங்களன்று எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.



அறுவைசிகிச்சையில்லாமல் இருதய சிகிச்சை!

அறுவைசிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் நவீன இருதய சிகிச்சை
மியாட் ஆஸ்பத்திரியில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கு




அறுவைசிகிச்சை இல்லாமல் ``பின்கோல்'' என்று அழைக்கப்படும் நவீன இருதய அறுவை சிகிச்சை பற்றிய தேசிய மாநாடு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று (சனிக்கிழமை,) தொடங்குகிறது.

நவீன இருதய அறுவை சிகிச்சை

இருதய அறுவைசிகிச்சை 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை நடைபெறுவது உண்டு. இருதயத்தில் உள்ள கோளாறைப்பொருத்து அறுவை சிகிச்சை அமையும்.

மயக்க இருதய அறுவைசிகிச்சையில் பெரும்பாலும் இருதயத்தை நிறுத்தி விட்டு அறுவை சிகிச்சை செய்வது உண்டு. மயக்க மருந்து கொடுக்காமல் திறந்த நிலையில் (ஓப்பன் ஹார்ட் சர்ஜரி) இருதய அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன முறையில் பின்கோல் சர்ஜரி சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மேமாதம் முதல் செய்யப்பட்டுவருகிறது.

விளக்கம்

பின்கோல் சர்ஜரி என்பது தொடையில் ஊசி போன்ற துவாரம் ஏற்படுத்தி அதில் உள்ள ரத்தக்குழாய் வழியாக மிக மெல்லிய கருவியை செலுத்தி அந்த கருவியை இருதயத்தில் பழுதடைந்த இடத்தில் பொருத்துவதே ஆகும். இந்த முறையில் பொருத்தப்படும் கருவி பாலியஸ்டர் துணி போன்றவற்றால் செய்யப்பட்டவையாகும். சில கருவிகள் வேறு வேறு பொருள்களில் செய்யப்பட்டிருக்கும். இவை இருதயத்தோடு அப்படியே சேர்ந்து கலந்து விடும்.

இந்த அறுவைசிகிச்சை அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் முடிந்து விடும். அதுவும் மயக்கமருந்து கொடுக்காமல் ஒரு ஊசி மட்டும் போட்டு அறுவைசெய்யப்படும். ஆனால் என்ன நடக்கிறது என்பது அனைத்தும் நோயாளிக்கு தெரியும். அதுமட்டுமல்ல, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நோயாளி எழுந்து நடக்கலாம்.

கருத்தரங்கு

இத்தகைய நவீன அறுவை சிகிச்சையான பின்கோல் சர்ஜரி பற்றிய நவீன தகவல்களை பறிமாற்றம் செய்வதற்கான தேசிய அளவிலான கருத்தரங்கு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மியாட் ஆஸ்பத்திரியின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மியாட் ஆஸ்பத்திரியின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்கள்.

மாநாடு நாளையும் நடக்கிறது.

இது குறித்து டாக்டர் மோகன்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்தரங்கில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பின்கோல் சர்ஜரியில் நிபுணத்துவம் வாய்ந்த 57 டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இருதய சிகிச்சை நிபுணர்கள் பயிற்சி டாக்டர்கள் உள்பட 200 பேர் கலந்து கொள்கிறார்கள். 19 மருத்துவ சிறப்புரைகள் நிகழ்த்தப்பட உள்ளன. இருதய நோய்கள் பற்றியும் பின்கோல் சர்ஜரி பற்றியும் புதிய முறைகள், புதிய தொழில் நுட்பம் பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் நாளையும் 6 குழந்தைகளுக்கு பின்கோல் சர்ஜரி செய்யப்பட உள்ளது. அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் வேதுஷ் (2) சவ்மியா (4), சுவேதா (5), ஆர்.மெர்சி, சங்கர் (18) , இளமலர் (21) ஆகியோர் நேற்று மியாட் ஆஸ்பத்திரியில் இருந்தனர். அவர்களுக்கு குறைந்த அளவு கட்டணம் தான் வாங்கப்படுகிறது.

இவ்வாறு டாக்டர் மோகன் தாஸ் தெரிவித்தார்.

மியாட் ஆஸ்பத்திரியின் குழந்தைகளுக்கான இருதய அறுவைசிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது:-

பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருத்தல், இருதயவால்வு சுருங்கி இருத்தல், ரத்தக்குழாய் சுருங்கி இருத்தல் உள்ளிட்ட குறைகளை போக்க பின்கோல் அறுவை சிகிச்சை ஏற்றதாகும். பிறந்து 2 நாட்களே ஆன குழந்தைக்கு கூட சர்ஜரி செய்து உள்ளோம். 8 பேருக்கு பின்கோல் சர்ஜரி செய்வதை கருத்தரங்கு திரையில் தெரியவைப்போம். அதை பார்த்து டாக்டர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்வார்கள். மேலும் அவர்களின் அனுபவ தொழில் நுட்பங்களையும் தெரிவிப்பார்கள்.

இவ்வாறு டாக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.

வாழ்த்து

ஆஸ்பத்திரி தலைவர் மல்லிகா மோகன்தாஸ் பின்கோல் சர்ஜரி செய்ய உள்ள குழந்தைகளிடம் தைரியமாக இருங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீடு இல்லை

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் இல்லை என்று பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான நேஷ னல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியர்களின் வருவாய், செலவு, சேமிப்பு பற்றி இந்த ஆய்வில் 63 ஆயிரம் குடும்பங் களிடம் கேள்விகள் கேட்கப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. தங்களுக்கு எந்தவித அசம் பாவிதமும் நடந்து விடாது என்றும் சேமித்து வைத்துள்ள பணத்தைக் கொண்டு குடும் பத்தினர் நன்கு வாழலாம் என்றும் பலர் கூறியுள்ளனர். ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்.

ஆயுள் காப்பீடு செய்து கொண்டவர்களில் 14 விழுக் காட்டினர் மட்டும்தான் பெண்கள். இதுபற்றிய போதிய விழிப் புணர்வு மக்களிடையே இல்லை.உத்தரப்பிரதேசத்தில் 42 சதவிகித குடும்பங்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் வீட்டிலேயே வைத்து இருக்கின்றனர். அவர்கள் எதிலும் முதலீடு செய்வதில்லை. 54 சதவிகிதம் பேர் வங்கிகளில் முதலீடு செய்கின்றனர்.
74 சதவிகிதம் மக்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின் றனர். ஆனால் 14 சதவிகிதம் பேர் தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

சேமிக்கும் விஷயத்தில் இந்தியர்கள் சாமர்த்தியசாலிகள் என்றாலும், அதை எப்படி புத்திசாலித்தனமாக சேமிப்பது என்பதுதான் தெரியவில்லை. 81 சதவிகித இந்தியர்கள் பணத்தை சேமித்தாலும், அவர்களின் அந்தப் பணம் அவர்கள் வீட்டிலோ, வங்கியிலோதான் உள்ளது. வேறு திட்டங்களில் இல்லை. குழந்தைகளின் கல்வி, அவசரத் தேவை, வயதான பிறகு பயன்படும் என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அதிக அளவில் சேமிக்கின்றனர்.

பொதுவாகக் காணும்போது, வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க உதவும் வழியாகத்தான், ஆயுள்காப்பீடு கருதப்படுகிறதே தவிர, அது பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு என்பதை அநேகர் கவனிப்பதில்லை.

இறால் மீன்களை தாக்கும் வெண்புள்ளி நோய் - ஆண்டிற்கு ரூ.500 கோடி நஷ்டம்

"இறால் மீன்களை வெண்புள்ளி நோய் தாக்கு வதால் இந்தியாவில் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது,'' என சென்னையில் நடந்த உவர்நீர் மீன் வளர்ப்பு கருத்தரங்கில் இந்திய மீன்வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல் பேசினார்.

இறால் வளர்ப்பில் மண் மற்றும் நீரின் முக்கியத்துவம், அவை சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கும் வகையில், மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் "உவர்நீர் மீன் வளர்ப்பு அமைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு' என்னும் தலைப்பில் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை கேரள வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சைலஸ் துவக்கி வைத்தார்.

அமெரிக்க ஆஃபர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சி.இ.பாய்டு, ரௌஸ், இந்திய கடல்மீன் ஆராய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் திவான் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் இந்திய மீன் வளர்ப்பு மைய தலைவர் சக்திவேல் பேசியதாவது: பசுமைப்புரட்சிக்கு விளைநிலங்களின் புரிந்துணர்வு எப்படி காரணமாக அமைந்ததோ, அதுபோல் நீலப்புரட்சிக்கு இறால் மீன் வளர்ப்பு காரணமாகி வருகிறது. இந்தியாவில் 1.4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இறால் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இறால் வளர்ப்பில் மண் மற்றும் நீரின் மேம்பாடு மிகவும் முக்கியம். இறால் மீன்களை வெண்புள்ளி நோய் தாக்குவதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வெண்புள்ளி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. செயற்கை முறையில் மீன்வளத்தை பெருக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை அருகே முட்டுகாட்டில் இரண்டு கோடி ரூபாய் செலவில் கொடுவா மீன் வளர்ப்பு நிலையம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடல் விஞ்ஞானிகள், மீனவர்கள், விவசாயிகள் ஆகியோர் மத்தியில் இன்று வரை நல்லுறவு இல்லை. கடல்சார் விஞ்ஞானிகள் நீலப்புரட்சிக்கான தங்கள் ஆராய்ச்சிகளோடு, தொழில்நுட்பங்களையும் எடுத்து கொண்டு மீனவர்களை நாடிச்செல்ல வேண்டும். மீனவர் கிராமங்களில் தொழில்நுட்ப சேவை மையம், உவர்நீர் மீன் வளர்ப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். கடலோரங்களில் சுத்தம் இல்லாத நிலையை அகற்றி, மீனவர்கள் தங்கள் பொருட்களை நல்ல முறையில் பேக்கிங் செய்து, நுகர்வோருக்கு வழங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சக்திவேல் பேசினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பொன்னையா தலைமையில் மைய ஆராய்ச்சியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழகத்தில் மீண்டும் கள்?

கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு சாதகமாக பரிசீலிக்கலாம்' என்று கருத்து தெரிவித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, "அரசு மீண்டும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என்ற தமது நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன நாடார் சங்கங்கள்.

ஆனால் இதை அரசு அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி ஆனந்தன் அறிவித்திருப்பதால் பரபரப்பில் இருக்கின்றனர் பனைத் தொழிலாளர்கள் மற்றும் நாடார் சங்கங்கள். தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க, தமிழக அரசு கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே தடைவிதித்தது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கள் இறக்கும் தொழில் செய்து வந்த பனைத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே "உடலுக்குக் கேடு விளைவிக்காத, மருத்துவக் குணம் கொண்ட தனிப் பதனீர் எனும் கள்ளை தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து இறக்கி விற்க அரசு அனுமதி தர வேண்டும்' என்று நீண்ட நாட்களாகவே அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் பனைத் தொழிலாளர்கள். நாடார் சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டன.

சமீபத்தில்கூட இதற்காகவே தூத்துக்குடி வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! தி.மு.க. உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், "கள் இறக்கும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்போம்' என்று தங்களது தேர்தல் அறிக்கைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறமிருக்க, விருதுநகரைச் சேர்ந்த நாடார் பேரவை பிரமுகர் ராமவேலு என்பவர், கள் இறக்கி விற்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தர்மராவ் மற்றும் பழனிவேலு ஆகியோர் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விசாரணையின் போது, ""விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளை விற்கும் அரசு, கள்ளுக்கு மட்டும் தடைவிதிப்பது ஏன்?'' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ""இந்தக் கோரிக்கை குறித்து அரசு சாதகமாகப் பரிசீலிக்கலாமே'' என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், ""அரசு இதை கனிவோடு பரிசீலித்து வருகிறது'' என்று சொன்ன பின்னர் மீண்டும் இந்தப் பொதுநல வழக்கு கடந்த 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

இப்போது இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஒரு வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "கள் இறக்க அனுமதி தர வேண்டும்' என்பதை வலியுறுத்திப் போராடி வரும் பல்வேறு நாடார் அமைப்பு தலைவர்களிடம் பேசினோம். நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் நம்மிடம், ""கடந்த 20 வருடங்களில் அடுத்தடுத்து வந்த அரசுகள் பனைத் தொழிலாளர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டன.

இது ஒரு பெரிய கம்யூனிட்டியின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை. தற்போது கள் இறக்க அனுமதி அளிப்பது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதால் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எங்களது இயக்கத்தில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இருப்பதால் இந்தப் பிரச்சினையை அரசியல் கலப்பு இல்லாமல்தான் கொண்டு செல்கிறோம்.

மது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. டாஸ்மாக்கில் அதிக விலையுள்ள விஸ்கி மற்றும் பிராண்டியை விற்கும் தமிழக அரசு, உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்காத கள்ளை மட்டும் தடை செய்வது ஏன்? ஆகவே நாங்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் காத்திருக்கிறோம். அரசு கள் இறக்க இருக்கும் தடையை நீக்கினால் தமிழகத்தில் 30 லட்சம் பனைத் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்'' என்றார்.

இதையே வேறு விதமாகச் சொல்கிறார் நாடார் பேரவையின் பொருளாளரும், சரத்குமார் ரசிகர்மன்ற மாநிலச் செயலாளருமான கரு.நாகராஜன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்குப் போட்ட நாடார் பேரவையைச் சேர்ந்த ஆர்.ராமவேலு தற்போது உயிருடன் இல்லை என்பதால் இவர்தான் தற்போது வழக்கை நடத்தி வருகிறார்.

அவர் நம்மிடம், ""எங்களது முக்கிய கோரிக்கை பனைத் தொழிலாளர்களிடமிருந்து கள்ளை அரசே கொள்முதல் செய்து பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான்! எனவேதான் நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம்'' என்கிறார்.
தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவையைச் சேர்ந்த கரிக்கோல்ராஜ், ""அரசே கள்ளுக்கடையைத் திறந்து நடத்த வேண்டும்.

அப்படியில்லையென்றால் குறைந்த பட்சம் பனைத் தொழிலாளர்கள் கள்ளை இறக்கி விற்றுக் கொள்ளவாவது அரசு அனுமதிக்க வேண்டும். அதோடு இளநீரைப் பதப்படுத்தி பாக்கெட்டுகளில் விற்பது போன்று பதநீரையும் பதப்படுத்தி அரசு விற்கலாம்.

இதை எல்லாம் செய்யாமல் எங்களது நலன் குறித்து அக்கறையோடு இருப்பதாக நாடகமாடுகிறது அரசு. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகாவது அரசு நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டும்'' என்று ஆவேசப்பட்டார் கரிக்கோல்ராஜ்.

பனைத் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலர் ராயப்பன், ""பனையில் இருந்து கிடைக்கும் பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி தயாரித்துதான் பனைத் தொழிலாளி பிழைக்க வேண்டுமென்றால் பனைத் தொழிலாளியின் குடும்பமே தொழில் செய்ய வேண்டும். குழந்தைகள் படிக்க முடியாது. வருமானமும் குறைவு.

ஆனால் அரசு கள் இறக்க அனுமதி கொடுத்தால் குடும்பத்தின் வருமானம் உயருவதுடன், எங்கள் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகும். இதனால்தான் நீதிமன்றத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்'' என்றார்.

பனைத் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்டு வரும் தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட தொழிலாளர் நல ஆணையத்தின் செயலர் அருள்தந்தை செல்வ ஜார்ஜ் நம்மிடம் பேசினார். ""கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பனை மரங்கள் அழிந்துவிட்டன.

ஏராளமான பனைத் தொழிலாளர்களும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தத் தடை நீங்கினால் அந்தத் தொழிலாளர்கள் மீண்டும் பனைத் தொழிலுக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். இதனால் தற்போது வறுமையில் தவிக்கும் பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவாவது அரசு கள் இறக்க இருக்கும் தடையை நீக்க வேண்டும்'' என்றார்.

நாடார் சங்கப் பிரமுகர்களின் கருத்தோ இவ்வாறு இருக்க, தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் குமரி அனந்தனோ இதை எதிர்க்கிறார். நாம் அவரிடம் இதுபற்றிப் பேசினோம். ""கள் இறக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே பனைத் தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.

பிற வழிகளிலும் அவர்களது வாழ்வை மேம்படுத்த முடியும். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முதல்வரைச் சந்தித்து வைத்த வேண்டுகோளில், கள்ளால் வரும் நன்மை என்பதில் கள்ளால் என்பதற்குப் பதிலாக பதநீரால், நுங்கால் வரும் நன்மைகள் என்றே இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டு மதுவும் உடலுக்குத் தீங்கு பயப்பதுதான். அவற்றையும் விரட்ட வேண்டும்.

எனவே ஏற்கெனவே இருக்கும் தீமைக்கு மேல் பெரிய தீமையா, சிறிய தீமையா என்று பார்க்காமல் புதிய தீமையாக இருக்கும் கள் வேண்டவே வேண்டாம். தமிழகத்தில் மூன்று கோடி பனை மரங்கள் ஏறுவதற்கு ஆள் இல்லாமல் பரிதாபமாக நிற்கின்றன.

அவற்றை முறையாகப் பராமரித்து பதநீர், நுங்கு போன்றவற்றை எடுத்தாலே ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி முதல் ஏழாயிரம் கோடி ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும். அதை விட்டுவிட்டு அரசு கள் இறக்க அனுமதி கொடுத்தால் கருப்பட்டி, கற்கண்டு, பதநீர், நுங்கு போன்ற பிற பொருட்கள் அடியோடு அழிந்துவிடும்.

எனவே நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கள் இறக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அரசு அறிவிக்க வேண்டுமென்று முதல்வரிடம் கேட்கப் போகிறேன்'' என்றார் ஆவேசமாக.

த. வளவன்

கந்துவட்டியை ஒழிக்க வேண்டுமானால்....

வங்கிகள் கடன் தந்தால் மட்டுமே கந்து வட்டியை ஒழிக்க முடியும்! மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்




காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில், இந்தியன் வங்கி சார்பில் இந்திரா கிராமப்புற வீட்டுக் கடன் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வில் கலந்து கொண்டு பேசும் போது அவர் கூறியதாவது:

அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப கடன் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பல்வேறு தொழில் செய்வதற்காக கடன் வழங்கும் முறைகள் எளிமை யாக்கப்பட்டு உள்ளன. கடன் தருவதுதான் வங்கிகளின் கடமை. அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவது மக்களின் கடமை.

தொழில் செய்பவர்களுக்குக் கடன் கிடைக்கும் போதுதான் உற்பத்தி பெருகும். அதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கும். தங்க நகைத் தொழி லாளர்களுக்கு இப்போது கடன் வழங்கும் திட்டம் மிக வும் சிறப்பாகச் செயல்படுத் தப்பட்டு வருகிறது.

கோதுமை, பருப்பு இறக்கு மதி செய்வது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சர்ச்சையைக் கிளப்புகின்றன. ஆனால் ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை. அந்த அளவுக்கு தங்கம் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் சுய தொழில் செய்பவர்கள் 48 சத விகிதம் பேர், கந்து வட்டிக்குக் கடன் வாங்கிதான் தொழில் செய்தனர். கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமானால் வங்கி கள் கடன் கொடுத்தால் தான் முடியும். எனவே, எல்லா துறையினருக்கும் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

2006-2007 இல் விவசாயக் கடனாக ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடனாக ரூ.13,424 கோடி வழங் கப்பட்டு உள்ளது. முன்பை விட இப்போது 4 மடங்கு கூடு தலாகக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தி சதவிகிதம் 12 முதல் 13 வரை அதிகரித்து இருப்பதற்கு வங்கிகள் கடன் வழங்கியதுதான் காரணம்.

- இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


கடன் கொடுத்தால்...வாங்குவார் இல்லை!

மாற்றுப்பயிர் சாகுபடிக்கு அதிக அளவில் வங்கிக்கடன் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.ஆனால் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாற்றுப்பயில் சாகுப்படியில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. யாருக்காவது ஆர்வம் இருந்தால் என்னை அணுகலாம்.

-இப்படி அழைப்பு விடுப்பவர் "நாபார்ட்" வங்கியின் உதவிப்பொது மேளாளர் திரு.பாஸ்கரன்.

அன்மையில் தஞ்சையில் நடைபெற்ற மாற்றுப்பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கில் பேசும் போதுதான் இத்தகைய தகவலை தெரிவித்தார்.இதே கருத்தரங்கில் பேசிய பி.எம்.டி வேளான் அறிவியல் மையத்தினை சேர்ந்த தமிழ் செல்வி மாற்றுப்பயிர் சாகுபடி குறித்தான பயிற்சியினை தங்கள் நிறுவனம் வழங்குவதாக கூறினார்.

வேளான் உதவி இயக்குனர் திரு.லோகநாதன் தனது பேச்சில்,"விழிப்பு உணர்வு ஊட்டினால் மட்டும் போதுமா...மாற்றுப்பயிர்களான மக்காச்சோளம், சூரியகாந்தி,எண்ணண பனை போன்றவற்றின் விதைகளுக்கு எங்கே போவது? என விவசாயிகளுக்கு சந்தேகம் எழும்.விதைகளையும் உரங்களையும் இலவசமாக கொடுக்க நாங்கள் தயார்.ஆனால் விவசாயிகள் ஆர்வம் காட்டினால்தான் எங்களுக்கு இது தொடர்பாக பேச ஆர்வம் ஏற்படும். அப்போதுதான் இன்னும் அதிக அளவில் விவசாயிகளுக்கு உதவ முடியும்" என ஆதங்கப்பட்டார்.

தொடர்புக்கு :4362221474

தரவு - பசுமை விகடன்

கோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'


விழுப்புரம் பகுதியில் கோடை காலத்திலும் செழிப்பாக வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மஞ்சம் புல் (தீவனப் புல்) பயிர் செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சியை ஒட்டிய பகுதியில் உள்ள கீழ்பெரும்பாக்கம், காகுப்பம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக பல விவசாயிகள் மஞ்சம் புல் பயிர் செய்து வருகின்றனர்.இதனை நிலையான வருமானமுள்ள தொழிலாக செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர்.

சுற்றுப் பகுதியில் வேறெங்கும் இல்லாத அளவில் 25 ஏக்கர் அளவிற்கும் மேற்பட்ட பகுதிகளில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த மஞ்சம் புல் பயிரிடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அதிகளவில் மாடுகள் வைத்திருந்தனர். தற்போது நகரை ஒட்டிய பகுதியான இங்கு விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டு விவசாயம் படிப்படியாக குறைந்து போய் விட்டது. தொடர்ந்து பெரும்பாலான வீடுகளில் மாடுகள் வைத்திருந்தவர்களுக்கு அவைகளுக்கு வழங்க புற்கள் வைக்கோல் போன்றவை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் ஆங்காங்கே இருந்த சிறிய அளவான இடங்களில் மஞ்சம்புற்களை வைத்து தங்களது கால்நடைகளுக்கு அறுத்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். நாளடைவில் பல்வேறு பகுதியில் இருந்து மஞ்சம் புல் வாங்க பலர் வந்ததால் இதன் தேவை அதிகரித்தது. அதனால் சிறிய விவசாயிகள் தங்களுக்கு இருந்த ஒரு ஏக்கர், அரை ஏக்கர் அளவில் புற்களை நிரந்தர பயிராக செய்யத் துவங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் 50 காசு ரூ.1 க்கு ஒரு கட்டு என விற்பனை செய்யத் துவங்கினர். தற்போது அதன் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது ரூ.3.50 என விற்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த புற்கள் தொடர்ந்து பயன் தந்து வருகிறது. ஒரு முறை பதியம் வைத்தால் பல ஆண்டுகள் வரை இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும்.

இவ்வாறு வளரும் தளிர்களை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். அறுவடையின் போது நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தால் விவசாய நிலங்களில் புற்கள்கூட கிடைப்பதில்லை. இதனால் மாடுகள் வளர்த்து வரும் விவசாயிகள் அவைகளுக்கு உணவாக மஞ்சம் புல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது கூடுதலான மஞ்சம் புல் தேவை அதிகரித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலான பகுதியில் புல் விளைச்சலுக்கு பதியம் செய்து வருகின்றனர்.

கோடையாக இருந்தாலும் மழைக்காலமாக இருந்தாலும் அனைத்து சீசன்களிலும் பயன் தரும் இந்த மஞ்சம் புல் பயிர் வகையை விவசாயிகள் செய்து பயன்பெறலாம். இதற்கென அதிகமான இட வசதி தேவையில்லை. சிறிய இடத்தில் கூட பயிர் செய்து தங்களது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதோடு வெளியில் விற்பனை செய்து வருவாயும் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. அள்ள அள்ள குறையாத செல்வம் என்பதைப் போல அறுக்க அறுக்க வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் பயன்பெறலாமே.

தகவல்-தினமலர்

கண்பார்வை குறைபாட்டிற்கு நவீன சிகிச்சை


இந்தியாவிலேயே முதன் முறையாக கத்தி இன்றி லேசர் மூலம் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள "இன்ட்ராலேஸ்' எனும் புதிய கருவியை சென்னை அகர்வால் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விலை 2 கோடி ரூபாய் ஆகும். ஒரு கண்ணுக்கு வழக்கமாக கட்டணம் 15 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் இதற்கு கட்டணம் ஆகும் என்று நிர்வாக இயக்குனர் அமர்அகவர்வால் தெரிவித்தார்.

கண் மருத்துவத்தில் பல்வேறு சாதனை களை மேற்கொண்டுள்ள அகர்வால் மருத்துவமனை "இன்ட்ராலேஸ்' எனும் லேசர் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவி மூலம் மேம்பட்ட கண் அறுவை சிகிச்சையை வழங்க முடியும்.

புதிய கருவியை அறிமுகம் செய்து வைத்து அகர்வால் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:

கண் மருத்துவத்தில் ஒரு புதிய மைல்கல்லாக "இன்ட்ராலேஸ்' கருவியை இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளோம்.

பிளேடு இல்லாமல் லேசர் மூலம் அறுக்கப்படும்
கண் பார்வையில் அதிக குறைபாடு இருந்து "சோடா புட்டி' கண்ணாடி போடுபவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பார்வை பெற லேசிக் லேசர் சிகிச்சை உள்ளது. இதற்கு ஒரு கண்ணிற்கு கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும். இதில் முதலில் பிளேடு மூலம் லென்ஸ் மேல்பாகம் அறுக்கப்படும். 2வது அடுக்கில் லேசர் செலுத்தி கண் குறைபாடு நீக்கப்படும். மீண்டும் மேல் பாகம் மூடப்படும். கண்ணில் கட்டு போட வேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் கண்ணாடி இல்லாமல் தெளிவாக பார்க்கலாம்.

கண் அறுவை சிகிச்சையின் போது தற்போது "மைக்ரோகெரடோம்' என்ற பிளேடு பயன்படுத்தப்படுகிறது. இதை மாற்றி கம்ப்யூட்டர் வழியாக லேசர் முறையில் அறுவை சிகிச்சையை இக்கருவி மூலம் மேற்கொள்ள முடியும். கத்தியின்றி ஒரு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பது இக்கருவியின் சிறப்பம்சம். இந்த கருவி மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மிக துல்லியமானதாகவும், நோயாளிக்கு அதிக பாதுகாப்பையும் வழங்கும்.

நவீன "இன்ட்ராலேஸ்' முறை பயன் படுத்தப்படும் லேசிக் சிகிச்சை வழியாக "ஸ்டாண்டர்டு' மற்றும் "லேசிக்' ஆகிய இரு சிகிச்சை முறைகளிலும் அதிக அளவிலான நோயாளிகள் பார்வை கூர்திறனை பெறுகிறார்கள் என்பது உலக அளவில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

கண் மாற்று அறுவை சிகிச்சையில் புதுமை

"இன்ட்ராலேஸ்' லேசர் சாதனத்தின் மூலமாக ஒரே நேரத்தில் விழி வெண் படலத்தை (கார்னியா) பல படிமங்களாக வெட்ட முடிவதால் கண் பார்வை யின்மையை ஒழிக்க முடியும். உதாரணமாக, இறந்தவர்களின் கண்களை எடுத்து பார்வை யற்றோருக்கு பொருத்தும் போது நோயாளி யின் விழி வெண்படலத்தின் முன்பகுதி சேதமடைந்திருந்தால் அதை மட்டும் இக்கருவி மூலம் மாற்றி அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

ஒரே கண்ணை 2 ஆக பிரித்து 2 பேருக்கு பொருத்தலாம்

அதே போல் பின்பகுதி சேதமடைந்திருந்தால் அதை மட்டும் தனியாக வெட்டி நோயாளிக்கு பொருத்தி பார்வையளிக்க முடியும். இதன் மூலம் ஒரு கண்ணைக் கொண்டு இருவிதமான குறைபாடு உள்ள இரு பார்வையாற்றவர்களுக்கு பார்வை அளிக்க முடியும் என்பது இந்த கருவியின் சிறப்பம்சம். இந்த சாதனம் இன்டர்நெட் மூலமாக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து அறுவை சிகிச்சையை ஆய்வு செய்ய முடியும். அறுவை சிகிச்சையின் போது சிறு குறைபாடுகள் ஏதாவது ஏற்படு மானால் அதை உடனுக்குடன் கண்டுபிடித்து சரிபடுத்த இந்த வசதி உதவியாக இருக்கும். "இன்ட்ராலேஸ்' கருவியின் விலை இரண்டு கோடி ரூபாய்.

இவ்வாறு டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்தார்.

அஞ்சல் துறை சொந்தமாக வங்கி துவங்க திட்டம்

வங்கிகளில் வட்டிவிகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வங்கிகள் பக்கம் திரும்புவதை தவிர்க்க சொந்தமாக வங்கி தொடங்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதிஅமைச்சகத்தை அணுகியுள்ளது.

பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மாதந்தோறும் வருவாயும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வங்கி அல்லது அஞ்சலகங்களில் மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை வங்கிகளில் வட்டிவிகிதம் மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் நிறைய பேர் பணம் போட ஆரம்பித்தனர். அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை எல்லா வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.

இந்தக் கணக்கில் பணம் போடுபவர்களுக்கு 9 சதவீட்டி வட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. ஒரு சில வங்கிகள் 10 சதவீதம் வரை வட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் வட்டியை உயர்த்த நிதி அமைச்சகத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு இருந்த கவர்ச்சி தற்போது குறைந்து விட்டது. அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர்களும் அதை ரத்து செய்து விட்டு வங்கிகளில் டெபாசிட் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அஞ்சல் துறையும் தனக்கு சொந்தமாக ஒரு வங்கி தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன் முழுவீச்சில் வங்கி தொடங்குவதற்கான பணிகளில் அஞ்சல் துறை இறங்கும். மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது இந்த தகவல்களை தெரிவித்தார்.

வேளாண்மையும் பெருந்தொழிலாக வேண்டும்

-என். விட்டல்
(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ""ரிலையன்ஸ்'', தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் "ஏர்-டெல்' போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

"மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன' என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, ""பேக்'' செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் ""மூன்றாவது புரட்சி'' ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ""பசுமைப் புரட்சி''யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் ""இரண்டாவது பசுமைப் புரட்சி'' இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த ""வெண்மைப் புரட்சி''யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது ""விவசாயியைச் சார்ந்த வேளாண்மை'' என்ற நிலைமையை மாற்றி, ""வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்'' என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

மியூச்சுவல் பண்ட் முதலீடு இனி குறையுமா?

வரும் ஜூலை 1ம் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (PAN) குறிப்பிட வேண்டும். இதனால் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பொது மக்கள் முதலீடு செய்வது பாதிக்கப்படலாம் என மியூச்சுவல் பண்ட் கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன.

மியூச்சுவல் பண்ட் முதலீடு இந்தியாவில் சமீப காலமாகத்தான் அதிகம் பேருக்கு தெரியத் தொடங்கியுள்ளது. இத்திட்டங்களில் இந்தியர்கள் ரூ.4,10,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.
எனினும் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குவிந்துள்ள பணத்தை விட, அமெரிக்காவில் 100 மடங்கு அதிக பணம் புரள்கிறது.இந்நிலையில் சிறிய முதலீடுகளுக்கும் கூட PAN குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவித்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக சிறிய நகரங்கள், கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகமாக இருக்குமாம். காரணம், அங்கு PAN எண் பற்றி போதிய விழிப்புணர்வு கிடையாது. நிறைய பேரிடம் PAN இருக்காது என்பதுதான்.இதுவரை இவற்றில் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக முதலீடு செய்தால்தான், வருமான வரித் துறை தரும் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) குறிப்பிட வேண்டும் என விதி இருந்தது.

ஆனால் ஜூலை 1 முதல் இது மாறுகிறது. இனி, வெறும் 50 ரூபாய் முதலீடு செய்தால் கூட, PAN எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகிறது. இதனால் மக்களின் முதலீடு குறையலாம் என கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன.“பங்குச் சந்தையில் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் PAN கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது அது மியூச்சுவல் பண்ட் திட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது” என இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத் தலைவர் ஏ.பி. குரியன் தெரிவித்தார்.

இப்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் பணத்தில் சுமார் 30 சதவீதம் சிறு நகர மக்கள் முதலீடு செய்ததுதான். தொடர்ந்து, இந்த தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முறைக்கு (‘SIP’) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அப்பன்திருப்பதி தரும் இய்ற்கை உரம்


விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கை உரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உரங்களை பதப்படுத்தி, பக்குவப்படுத்தி தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனாலேயே செயற்கை உரங்களை நம்மூர் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இவற்றால் வயல்களுக்கும், பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

இயற்கை உரத்தின் அவசியத்தை உணர்ந்துள்ள வெளிமாநிலத்தவர்கள் நம்மூர் கிராமப் பகுதிகளில் கிடைக்கும் பதப்படுத்திய மாட்டுச் சாணத்தை வாங்கிச் செல்கின்றனர்.மதுரை அழகர்கோவில் நெடுஞ்சாலையில் உள்ளது அப்பன்திருப்பதி. அப்பன்திருப்பதி அருகே உள்ள மாத்தூர் பகுதியில் சிலர் கூடாரம் அமைத்து தங்கி உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் உள்ள ஆயிரக்கணக்கான மாடுகளை அருகில் உள்ள வயல்வெளிகளில் கிடைகள் அமைக்கின்றனர்.

இதில் கிடைக்கும் மாடுகளின் சாணத்தை சேகரித்து எருவாக மாற்றுகின்றனர். இதனை வெயிலில் உலர வைத்து, பதப்படுத்தி பவுடராக்குகின்றனர். பின்னர் சில நாட்கள் அதனை மண்ணில் மூடி வைத்து, சாக்கு மூடைகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு தயாராக்குகின்றனர். தோட்டங்களுக்கு சிறந்த உரமாக இருப்பதால் கேரளாவில் உள்ள டீ எஸ்டேட் உரிமையாளர்கள் லோடு கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். இதே போல் கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் தொழிலதிபர்கள் மாத்தூர் வந்து இயற்கை உரங்களை டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

தகவல் - தினமலர்

விரிவாகிறது "பாரமவுண்ட் ஏர்வேஸ்"



கடந்த 2005ல் மதுரையை சேர்ந்த கருமுத்து. தியாகராசன் அவர்களின் குழுமத்தினரால் துவக்கப்பட்ட பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் பிரேசிலிடமிருந்து 40 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8,200 கோடி.

புதிய எம்பரர் ரக விமானங்கள் 2008 முதல் 2011&க்குள் தயாராகி விடும். இப்போது இந்நிறுவனத்திற்கு 5 விமானங்கள் உள்ளன. நிறுவனத்தின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக வேறொரு விமான நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு மேற்குப் பகுதிகளுக்கு விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார் பாரமவுன்ட் நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன்.

இப்போது தென்னகப் பகுதிகளில் மட்டும் 26 சதவீத சந்தை பங்குடன் உலவும் இந்நிறுவனம் 2009 மத்தியில் மேற்கத்திய பகுதிகளில் குறிப்பாக மும்பையிலும் இதே அளவு சந்தை பங்கை கைப்பற்றவும் 2011&ல் அறுபது விமானங்களுடன் நாடு முழுவதும் விமான சேவையை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் வருகிறது 'NIKE' காலணி தொழிற்சாலை


காஞ்சிபுரம் அடுத்த செய்யாறு பகுதியில் ரூ.300 கோடி முதலீட்டில் சர்வதேச பிராண்டான "நைக்" காலணி தொழிற்சாலை அமைகிறது. இதை ஹாங்காங்கைச் சேர்ந்த குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி தொடங்கும். 15,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

தைவானைச் சேர்ந்த காலணி நிறுவனம் பெங் டாய் என்டர்பிரைஸ். இது உலகப் புகழ்பெற்ற "நைக்" தயாரிப்புகளைத் தயாரித்து சப்ளை செய்கிறது. அதன் துணை நிறுவனமாக ஹாங்காங்கைச் சேர்ந்த குரோத் லிங்க் ஓவர்சீஸ் செயல்படுகிறது. இது தமிழகத்தின் செய்யாறு பகுதியில் அமைய உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தனது காலணி தொழிற்சாலை அமைக்கவுள்ளது.

செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவை ஒட்டி சுமார் 275 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலை அமைப்பதுடன், காலணி தயாரிப்புப் பொருட்களைச் சப்ளை செய்யும் நிறுவனங்களையும் அங்கு கொண்டு வர முயற்சி தொடங்கியுள்ளது. இதற்காக தனது சப்ளை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எதிர்கால விரிவாக்கத் திட்டங்களுக்காக 225 ஏக்கர் கூடுதல் இடத்தை வாங்குவதற்காக தமிழக அரசுடன் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே குரோத் லிங் ஓவர்சீஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. முழுவதும் ஏற்றுமதிக்கான காலணி தயாரிப்பை செய்யாறு தொழிற்சாலை மேற்கொள்ளும். அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் காலணி ஜோடிகள் தயாரிக்கப்படும்.

செய்யாறு தொழிற்சாலையில் முதல் 2 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். அடுத்த 3 ஆண்டுகளில் இது 15,000 ஆக உயரும். ஊழியர்களில் 80 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என்று குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய செய்யாறு பகுதி வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தானாக இடுப்பில் பொருந்தும் புது ரக பேண்ட்

திருப்பூரைச் சேர்ந்த ராயல் கிளாசிக் மில்ஸ் நிறுவனம், "கிளாசிக் போலோ' டிசர்ட்டுகளை வெளிநாடுக்ளுக்கு ஏற்றுமதி செய்து நல்ல வரவேற்பை பெற்றது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக சுருக்கம் இல்லாத உடலுக்கு ஏற்ற வகையில் தானாக இடுப்பில் பொருந்திக் கொள்ளும் பேண்ட் அறிமுகம் செய்துள்ளது.

ரெடிமேட் பேண்ட் வாங்கிய பிறகு, தனியாக மாற்றம் செய்து தைக்க வேண்டிய வேலை இனி இல்லை. இந்த பேண்ட் துணிகள் சீன நாட்டின் நவீன தொழில்நுட்பத்தில் சுருங்காத துணியாக, இஸ்திரி செய்ய தேவை இல்லாததாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேண்ட் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலையில் விற்பனை செய்யப்படும். இது தயாரிக்க பிரம்மாண்ட தொழிற்சாலை கோவை அருகே 11 கோடி ரூபாயில் ஒரு ஷிப்டிற்கு 800 பேண்ட் தயாரிக்கும் வசதியுடன் கிளாசிக் போலோ நிறுவியுள்ளது என்று ராயல் கிளாசிக் நிறுவன எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஆர். சிவராம் தெரிவித்தார்.

இதுவரை ரெடிமேட் பேண்ட் வாங்குபவர்களுக்கு பேண்டில் கால் உயரம் அதிகமாக இருந்தால் வெட்டி தைக்கப்படும். ஆனால் இடுப்பு சுற்றளவு சரி செய்ய முடியாது. இதனால் ரெடிமேட் பேண்ட் வாங்க யாரும் விரும்புவதில்லை.

கிளாசிக் போலோ ஆடைகள் தயாரிக்கும் ராயல் கிளாசிக் நிறுவனம் "ஆட்டோ பிட்' என்னும் தானாக இடுப்பில் பொருந்திக் கொள்ளும் டிரவுசர்களை தயாரிக்கிறது. இந்தியாவில் ரெடிமேட் பேண்ட் அணிபவர்கள் அதிகரிப்பதால் இந்த புதிய பேண்ட்களை அறிமுகம் செய்துள்ளது என்று எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஆர். சிவராம் தெரிவித்தார்.

உயர்ரக காட்டன் நூலில் புது ரக வாசிங் தொழில்நுட்பமான சீன நாட்டு "வெய்சி' தொழில்நுட்பத்துடன் சுருங்காத துணியில் இந்த பேண்ட் தயாரிக்கிறது. இதற்காக அதிக அழுத்தம் கொண்ட யந்திரம் வழியாக இந்த ஜவுளி தயாரிப்பு நூல் செலுத்தப் படுகிறது. இதனால் துணி சுருங்காது.

திருப்பூரை சேர்ந்த ராயல் கிளாசிக் குரூப் 225 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக 1991ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. டெக்ஸ்டைல்ஸ், ஏற்றுமதி ஆடைகள் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இதில் 110 கோடி ரூபாயில் நூற்பாலை முதல், துணிகள் நெசவு, ரெடிமேட் ஆடை தயாரிப்பு யூனிட்டுகளை நிறுவி உள்ளது.

கோவை அருகே ரெடிமேட் பேண்ட் தொழிற்சாலை

கோவை அருகே "வாகராய்' பகுதியில் 6 ஆயிரம் சதுர அடியில் 4 கோடி ரூபாயில், ஒரு ஷிப்டிற்கு 120 பேருடன் 800 ஜோடி பேண்ட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ராயல் கிளாசிக் நிறுவனம் நிறுவி உள்ளது. இந்த தொழிற்சாலையை 7ந்தேதி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா திறந்து வைக்கிறார். இதையொட்டி ஒரு "பேஷன் ஷோ' திருப்பூரில் நடைபெறுகிறது என்றும் சிவராம் தெரிவித்தார்.

ராயல் கிளாசிக் நிறுவனம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகளில் ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் 36 ஷோரூம்கள், 1750 ஜவுளி ஷோரூம்களில் கிளாசிக் போலோ ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கிளாசிக் போலோ ஆடவருக்கு ரெடிமேட் ஆடைகள், "ஸ்மாஷ்' உள்ளாடைகள், ஸ்போர்ட்ஸ் ஆடைகள் தயாரிக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு புதிய டிசைன்களில் ஆடைகள் அறிமுகம் செய்கிறது என்றும் சிவராம் தெரிவித்தார்.

ESOP-னா என்ன?

1.What is ESOP ?
ESOP is short form of Employees Stock Option Plan. Under this plan, companies provides employees a plan by which the employees get an option to acquire shares of their employer company over a period of time at a reduced price or nil price. Therefore ESOP is primarily a kind of incentive to hold the employees to the company's fold .Therefore, question of taxing this perquisite and capital gains at the time of sale of shares received by the employees arise.

2.What are the new taxation scheme of ESOP?
The new scheme of taxation of Employees Stock Option Plan initiated by Finance Bill passed on 11th May 2007 and effective from 1/4/2007 is as follows

No taxation of perquisite in hands of employees.
Employer to pay Fringe Benefit Tax at the time vesting of shares in Employees.
Employee to pay capital gains tax at the time of sale of shares received under ESOP.

3.Fringe Benefit Tax To Be Paid By Employer
Section 115WB1(d) has been inserted in the I T Act to bring ESOP under FBT . The said provision and explanation therein made it explicitly clear that ESOP is under FBT

any specified security or sweat equity shares allotted or transferred, directly or indirectly, by the employer free of cost or at concessional rate to his employees (including former employee or employees).

4. How the value for fringe benefit on ESOP computed?
Section 115WC(1)(ba) gives the method of valuation of ESOP for the purpose of imposing fringe benefit tax. The said provision under 115WC(1)(ba) is as under

the fair market value of the specified security or sweat equity shares referred to in clause (d) of sub-section (1) of section 115WB, on the date on which the option vests with the employee as reduced by the amount actually paid by, or recovered from, the employee in respect of such security or shares.

What the aforesaid provision states in simple terms is

Fair market value (FMV) of shares has to be taken for valuation purpose.
The valuation date for FMV is the date on which the shares are vested in employee.
The value of fringe benefit shall be FMV reduced by amount paid by employee.
The FBT will be charged @ 33.99%

5. How the Fair market value is determined?
As per explanation, Central Board of Direct Taxes will come out with method of Fair Market Valuation . CBDT has not come out yet.But one should expect that FMV shall be almost equal to average rate on either NSE or BSE on the date of valuation.

6.What is this vesting of shares?
Under ESOP , an employee is given an option of buying the share of companies at a reduced priced. The Option is a Right but no obligation. Therefore , date of vesting of shares means the date when the company allots shares to employee.

7. What happens when employee sells the shares received under ESOP?
The gains shall arise on sale of those shares. The value of capital gains shall be computed by reducing the cost of acquiring such ESOP shares from the sale consideration. For determining the cost of acquisition section 49(2AB ) has been introduced from 1/4/2007 so as to provide that fair market value taken for computing the FBT by the employer shall be taken as COST of acquisition of shares. The exact wordings of section 49(2AB) is as under:

Where the capital gain arises from the transfer of specified security or sweat equity shares, the cost of acquisition of such security or shares shall be the fair market value which has been taken into account while computing the value of fringe benefits under clause (ba) of sub-section (1) of section 115WC.




Let us take an example.
A company announces an ESOP plan under which company will allot 500 shares of company to certain employees at a price of Rs 100. Those eligible employees will have option of getting allotment of 100 shares on 1st day of October every year starting from 1/4/2007 for next five years.Let us say, Mr X an employee fills out the ESOP application form on 1.7.2007 for allotment of shares . He is allotted 100 shares on 1/10/2007 . The market value on 1/10/2007 , (vesting day) is RS 500. These 100 shares , let us think , hypothetically, sold by the employee on 31/3/2009 at a price of RS 1200. Then

FBT to be paid by the employer company will be 33.99% on (Rs500-Rs 100)x 100 nos=Rs 16000.Since the vesting date is 1/10/2007 ,FBT will be paid in the year of vesting i.e FY 2007-08 .

There will be long term capital gain on 31/3/2009 since the the shares allotted on 1/10/2007 are hold for more than one year. The long term capital gains shall be computed as under

Sale consideration RS 1200 x 100 = Rs 1,20,000
Less

Cost of acquisition is FMV for FBT purpose i.e Rs 500x 100 =Rs 50,000
Long Term Capital Gains = Rs 70,000

Please note

for simplicity , indexation of cost has not been done otherwise indexation benefit shall be given in case of long term gains and that will substantially reduce the tax liability.

The tax on sale of shares may be nil if aforesaid shares are sold through stock exchange by paying securities transaction tax because long term capital gains on shares are exempt from tax.

ஏற்றுமதியாகும் மண்புழு உரம்


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த கட்டக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார். தோட்டக்கலையில் எம்.எஸ்சி., படித்த இவர், படிப்பு முடிந்ததும் டாடா கம்பெனிக்கு மாலத் தீவில் ஒரு தோட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியை ஏற்றார். ஓய்வு நேரத்தில் ஏற்றுமதி குறித்த பயிற்சியும் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய இவர், இங்கிருந்து மாலத்
தீவிற்கு செடிகள் மற்றும் உரம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார்.

ஒரு ஆண்டிற்கு முன் மதுரையில் மத்திய அரசின் நிதி உதவி பெற்று செயல்படும் "வேப்ஸ்' நிறுவனத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சி சான்றிதழை கொண்டு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று மண்புழு உரப் பண்ணையை சொந்தமாக துவக்கினார். இங்கு தயாராகும் மண்புழு உரத்தை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் கார்த்திக்குமாருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

"மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் "பெட்' அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம். அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அந்த குழியில் தென்னை நார் கழிவை கொட்டி, அதன் மீது "மொலாசஸ்' கழிவை துõவ வேண்டும். அடுத்ததாக, நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண் புழுக்களை விடவேண்டும். சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்' என்கிறார் கார்த்திக்குமார்.

முதலீட்டாளருக்கு விழிப்புணர்வு -‘செபி’ திட்டம்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பு (செபி) திட்டமிட்டு உள்ளது. தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை பற்றி மேலும் அதிக விவரங்களை தெரிவிக்க முடியும். இதனால் பங்குச் சந்தை மிகவும் ஒழுங்குமுறைகளுடன் வெளிப்படையாக செயல்பட உதவும் என செபி தலைவர் எம். தாமோதரன் தெரிவித்தார்.

“பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு, அதில் உள்ள அபாயங்களை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதலீட்டுக்கு வருமானம் எவ்வளவு கிடைக்கும், இது தொடர்பான சட்ட விதிமுறைகள் ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் அறிய வேண்டும்‘‘ என்றார் தாமோதரன்.
இந்த ஆண்டு இறுதியில் விழிப்புணர்வு திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் அமைப்புகள் இன்னும் ஏராளமாக அமைக்கப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் மேலும் நிறைய முதலீட்டாளருக்கு விஷயங்கள் போய்ச்சேரும் என்றார்.
கடந்த ஆண்டு வரை 8 முதலீட்டாளர் அமைப்புகள்தான் இருந்தன. தற்போது இது 28 ஆக அதிகரித்துள்ளது என்றார் அவர்.

வளர்ந்த நாடுகளின் பங்குச் சந்தையோடு ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தை மிகவும் ஒழுங்குமுறைகளுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. பரிவர்த்தனைகளும் மிக வேகமாக நடக்கின்றன என்றார்.

பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு செய்கிறார்களா என்பது குறித்து செபியிடம் எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த தாமோதரன், தீவிரவாதிகள் யாரேனும் முதலீடு செய்கிறார்களா என பார்ப்பது செபியின் பணி அல்ல. இந்த மாதிரியான சட்டவிரோத பண பரிமாற்றங்களை ஆராய்ந்து, பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டியது வங்கிகளின் பொறுப்பு என்றார் அவர்.

தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் தரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இவ்விஷயத்தில் கம்பெனிகளின் பங்குதாரர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார்.

Tax Dedcution Number

நம் எல்லோருக்கும் PAN தெரியும்..அதென்ன TAN?,

அதாவது பத்து லட்ச ரூபாய்க்கு மேல் வருவாயோ அல்லது 40 லட்ச ரூபாய் அல்லது அதற்கு மேல் விற்றுவரவு வைத்திருப்போர் அனைவரும் கட்டாயம் இந்த TAN வைத்திருக்க வேண்டும். இது குறித்த தெளிவுக்கு..கீழே தொடர்ந்து படியுங்கள்...


1. What is TAN?TAN or Tax Deduction and Collection Account Number is a 10 digit

alpha numeric number required to be obtained by all persons who are responsible for deducting or collecting tax. It is compulsory to quote TAN in TDS/TCS return (including any e-TDS/TCS return), any TDS/TCS payment challan and TDS/TCS certificates.

2. Who must apply for TAN?

All those persons who are required to deduct tax at source or collect tax at source on behalf of Income Tax Department are required to apply for and obtain TAN.

3. Why to apply for TAN?

The provisions of section 203A of the Income-tax Act require all persons who deduct or collect tax at source to apply for the allotment of a TAN. The section also makes it mandatory for TAN to be quoted in all TDS/TCS returns, all TDS/TCS payment challans and all TDS/TCS certificates to be issued. Failure to apply for TAN or comply with any of the other provisions of the section attracts a penalty of Rs. 10,000/-.

4. Why is it necessary to have TAN?

TAN is required to be quoted in all TDS/TCS returns, all TDS/TCS payment challans and all TDS/TCS certificates to be issued. TDS/TCS returns will not be received if TAN is not quoted and challans for TDS/TCS payments will not be accepted by banks. Failure to apply for TAN or not quoting the same in the specified documents attracts a penalty of Rs. 10,000/-

5. How to apply for TAN?

An application for allotment of TAN is to be filed in Form 49B and submitted at any of the TIN Facilitation Centres meant for receipt of e-TDS returns. Addresses of the TIN FC are available at www.incometaxindia.gov.in or http://tin.nsdl.com.

6. Who will allot TAN?

TAN is allotted by the Income Tax Department on the basis of the application submitted to TIN Facilitation Centres managed by NSDL. NSDL will intimate the TAN which will be required to be mentioned in all future correspondence relating to TDS/TCS.

7. Can an online application be made for allotment of TAN?

Yes. The application can be made online through http://tin.nsdl.com.

8. Can an application for TAN be made on a plain paper?

No. TAN Application can be made only on Form 49B. The application form can be downloaded from the website of the Income Tax Department (www.incometaxindia.gov.in)or NSDL (http://tin.nsdl.com ) or printed by local printers or obtained from any other source. The application is also available at TIN Facilitation Centres.

9. Can form 49B be filled on a typewriter?

Yes. But typing should be in capital letters with good impression.

10. What are the documents that need to accompany the TAN application?

No documents are required to be filed with the application for allotment of TAN. However, where the application is being made online, the acknowledgment which is generated after filling up the form will be required to be forwarded to NSDL. Detailed guidelines for the procedure are available at http://tin.nsdl.com

11. What if incomplete form 49B is submitted?

The TIN Facilitation Centre will assist the applicant to correctly fill up Form 49B but shall not receive incomplete or deficient application.

12. What is the fee for filing application for TAN?

The applicants for TAN are to pay Rs.50/- + service tax (as applicable) as processing fee at the TIN FC at the time of submitting Form 49B.

13. How will the new TAN number be intimated to the deductor?

NSDL will ensure intimation of new TAN at the address indicated in the Form 49B or against the acknowledgement in case of online applications for TAN.

14. How can a deductor know his TAN if he has an old TAN, or if he has earlier applied for TAN but hasn't got TAN?

TIN Facilitation Centres will help the deductors in ascertaining their correct TAN from the database. TAN can also be verified from the information on the website of Income Tax Department at www.incometaxindia.gov.in. There is a search engine to find new TAN against old TAN or to find new TAN against name and address of the deductor.

15. What happens in a situation where a deductor does not have TAN or has a TAN in old format?

The deductor will have to file an application in Form 49B at the TIN Facilitation Centre along with application fee (Rs 50/-+ service tax as applicable) for TAN.

16. Is it necessary to apply for different TAN if a deductor has to deduct tax from different types of payments like salary, interest, dividend etc.?

No. TAN once allotted can be used for all type of deductions. It can also be used in case tax is being collected at source also.

17. Is a separate TAN required to be obtained for the purpose of Tax collection at Source?

In case a TAN has already been allotted, no separate application needs to be made for obtaining TAN. The same number can be quoted in all returns, challans and certificates for TCS. However, if no TAN has been allotted, a duly filled in Form 49B, alongwith the application fees is to be submitted at any TIN-FC.

18. Should Government deductors apply for TAN?

Yes

19. In case of multiple DDOs, should all of them apply for TAN?

Yes. The name of the Division; name and location of branch or the designation of the person responsible for deducting/collecting tax, whichever is applicable, should be clearly given in the application for allotment of TAN.

20. Can branches of companies/banks have separate TANs?

Yes. The name and location of branch or the designation of the person responsible for deducting/collecting tax, whichever is applicable, should be clearly given in the application for allotment of TAN

21 Can an e-TDS return be filed without TAN or in case TAN has not been alloted?

Quoting of TAN is mandatory in TDS and TCS returns, whether filed in paper or electronic format. The returns, whether in paper or electronic format, will not be received in case TAN is not quoted.

22. What is duplicate TAN?

Duplicate TAN is a TAN which has been inadvertently obtained by a same person who is responsible for deducting/collecting tax and who already has a TAN allotted to him earlier. It is illegal to possess or use more than one TAN. Different branches/divisions of an entity may, however, have separate TAN.

23. In case duplicate TAN has been allotted, which TAN should be used?

In case duplicate TANs have been allotted, the TAN which has been used regularly should be used. The rest of the TANs should be surrendered for cancellation using "Form for Changes or Correction in TAN" which can be downloaded from the website of NSDL (http://tin.nsdl.com).

24. What do we have to do if we have been allotted a duplicate TAN by oversight?

In case duplicate TAN has been allotted, an application may be made for cancellation of the TAN which has not been used in the "Form for Changes or Correction in TAN" which can be downloaded from the website of NSDL (http://tin.nsdl.com) or printed by local printers or obtained from any other source. The application is also available at TIN Facilitation Centres.

25. Can we quote PAN in place of TAN? Why not?

No. TAN should never be quoted in the field where TAN is required to be quoted. The purposes for which PAN and TAN are allotted are different. TAN is a unique identification number which is allotted to persons who are deducting or collecting tax at source on behalf of the Income Tax Department. PAN is a unique number allotted to assessees like individuals, companies etc.26. How can any change in address or details on the basis of which TAN was allotted be rectified?In case any changes or corrections are to be made in the in the data associated with the reformatted or newly allotted 10 digit TAN, the "Form for Change or Correction in TAN data" can be used.27. How can a challan for payment of TDS/TCS obtained which has TAN printed on it?A challan with pre-printed TAN can be downloaded from the website of Income Tax Department ( www.incometaxindia.gov.in).
28. If a deductor/collector has a TAN as per the old format or if he has earlier applied, but has not been allotted TAN, what should he do? Ans. TIN-FC will help the deductors/collectors in ascertaining their correct TAN from the database available with them. TAN can also be verified from ITD’s website, wherein there is a facility to find new TAN against old TAN / name and address of the deductor/collector. In case no TAN has been allotted, the deductor will have to file an application in Form 49B along with application fee (Rs 50+ service tax as applicable) either at any TIN-FC or online at NSDL-TIN website.
29.Where can I find the address of the nearest TIN-FC?Ans. Addresses of all TIN-FCs is available on NSDL-TIN website.
30. Is it necessary to apply for different TAN if a deductor has to deduct tax from different types of payments like salary, interest, dividend etc.? Ans. No. TAN once allotted can be used for all type of deductions/collections.
31. Should Government deductors apply for TAN?Ans. Yes. All Government deductors are also required to quote the TAN on their TDS / TCS / Annual Information Returns.
32. In case of multiple DDOs, should all of them apply for TAN? Ans. Yes. In such case, the name of the Division; name and location of branch or the designation of the person responsible for deducting/collecting tax, whichever is applicable, should be clearly given in the application for allotment of TAN.
33. Can branches of companies/banks have separate TANs? Ans. Yes. The name and location of branch or the designation of the person responsible for deducting/collecting tax, whichever is applicable, should be clearly given in the application for allotment of TAN.
34. Can a TDS/TCS/Annual Information return be filed without TAN in case TAN has not been allotted? Ans. Quoting of TAN is mandatory in all TDS/TCS/Annual Information returns, whether filed in paper or electronic format. The return, whether in paper or electronic format, will not be received in case correct TAN is not quoted.
35.Can I quote PAN in place of TAN? Ans. No. PAN should never be quoted in the field where TAN is required to be quoted. The purposes for which PAN and TAN are allotted are different. TAN is a unique identification number which is allotted to persons who are deducting or collecting tax at source on behalf of the Income Tax Department. PAN is a unique number allotted to assessees like individuals, companies etc.
36.What is the procedure to apply for TAN online?Ans. You can apply for TAN online at the NSDL-TIN website. You can then fill and submit the form online. Once you click on button 'submit', an acknowledgment containing a unique 14 digit acknowledgment number is generated on the screen. You should print this acknowledgment, sign it and despatch it to NSDL at the address mentioned on NSDL-TIN website along with the processing fee which is Rs. 50 + service tax (as applicable). Payment can be made by DD/cheque, payable at par in Mumbai, favouring NSDL-TIN .
37.How can the change in address or details on the basis of which TAN was allotted be communicated to Income Tax Department?Ans. Any change or corrections in the data associated with the TAN, should be communicated to ITD by filing up 'Form for Changes or Correction in TAN data for TAN allotted' alongwith the necessary fees at any of the TINFCs, or at NSDL-TIN website.38.What are the charges I have to pay while submitting the 'Form for Changes or Correction in TAN data for TAN allotted'?Ans. You have to pay Rs. 50 (plus service tax, as applicable) to NSDL/TIN-FC as processing fees while submitting your application at the TIN-FC or making online application.39. If I change my address, should I inform ITD or should I apply for a new TAN?Ans. Change of address within a jurisdiction does not change the TAN. However, it may involve a change in the Assessing Officer. Such changes must, therefore, be intimated to ITD so that the TAN database of ITD can be updated. In case of change of address from one jurisdiction to other (e.g. address changes from Bangalore to Mumbai) a new TAN needs to be applied for and previous TAN needs to be surrendered on allotment of fresh TAN.4o. What can serve as proof of TAN in case one has lost the TAN allotment letter?Ans. Printout of the webpage showing details of TAN, from the Income Tax Department's website can serve as proof of TAN.

PINHOLE SURGERY



Microlaparoscopy அல்லது pinhole surgery என அறியப்படும் இவ்வகை அறுவை சிகிச்சைகள் அன்மை காலமாய் பிரபலமடைந்து வருகின்றன. கத்தியின்றி,ரத்தமின்றி செய்யப்படும் இவ்வகை அறுவை சிகிச்சைகளினால், சிகிச்சைக்குபின் நோயாளிகள் படும் அவஸ்தை பெரிதும் குறைவதுடன் விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் சாதகமும் இருக்கிறது.

இதுகுறித்த மேலும் பயனுள்ள தகவல்கள் இங்கே

மரம் வளர்க்க தயாரா?

தமிழக வனத்துறை சார்பில் தனியார் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் வரும் மழைக்காலத்தில்(செப்டம்பர் முதல்) நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறது.அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலன்பெறும் வகையில் இலவசமாக மரக்கன்றுகளை வனத்துறை வழங்க இருக்கிறது.

பெருகிவரும் புவி வெப்பத்தினை தடுத்து,நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் தரிசு நிலங்கள், விளைநிலங்களின் ஓரமாக மரங்களை வளர்க்கலாம். இதற்காக தனிநபருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த தொகை பணமாக தரப்படமாட்டாது. மரக்கன்றுகள்,குழியெடுத்தல், நடவு செய்தல் போன்றவைக்காக செலவிடப்படும். பயன் பெற நினைக்கும் விவசாயிகள் "நான் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்ப்பேன்" என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையெழுது போட்டு கொடுத்தால் போதும்.

தேக்கு, வேம்பு, சவுக்கு,பீநாரி மற்றும் இலவம்பஞ்சு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. விளை நிலங்களில் மண்ணின் ஈரம் நிலைநிறுத்தப்படுவதுடன், பத்தாண்டுகளில் இந்த மரங்களின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் 2007-08-ம் ஆண்டுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட வனத்துறை(சமூக காடுகள்)அலுவலகத்தை அணுகலாம்.

மதுரை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, திருமங்கலம், மேலூர் மற்றும் தேனி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டது. மதுரைமாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி:0452-2562912. அலைபேசி 98654-83066

தேனி மாவட்ட விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி 98659-21557


-தகவல் பசுமைவிகடன்

Fiat Palio Stile


வந்தேவிட்டது....ம்ம்ம்ம்

ஆம் மிக ஆவலாய் எதிர்பார்த்த FIAT-TATA கூட்டனியின் முதல் கார் இன்று சந்தைக்கு வந்தேவிட்டது.‘Car of the New Generation’ என விளம்பரபடுத்தப்படும் இந்த காரின் எழுபது சதவித பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது மகிழ்ச்சியான செய்தி.

ஏனெனில் கடந்த காலங்களில் Fiat நிறுவனம் மிக மோசமான விறபனைக்கு பிந்திய சேவையினால்தான் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்தார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.தற்போது டாட்டாவின் பின்புலமும் சேர்வதால் இந்த பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்பட்டுவிட்மென்றே நினைக்கிறேன்.

தற்போது நான்கு மாடல்களை அறிமுகப்படுத்துகின்றனர்.1.1 litre engine ல் மூன்று(1.1 SL 1.1 SLE 1.1),1.6 litre engine ல் ஒன்று(SLX 1.6 Sport). இவை முறையே ரூ.3.90 லட்சம் முதல் ரூ.4.30 லட்சம் இருக்குமென தெரிகிறது.மேலும் விவரங்களுக்கு Fiat India வின் இனைய தளத்தினை பாருங்கள்.

இந்த காரில் நான் கவனித்த அம்சங்கள்...

# நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள redesigned dual color dashboard.
# Palio வை விட 30 கிலோகிராம் வரை எடை குறைக்கப்பட்டுள்ளது.
# டாட்டா நிறுவனத்தின் Dealers மூலமான விற்பனைக்கு பிந்தைய சேவை.
# வண்டியின் Fuel efficiency நிச்சயமாக கூடுதலாகவே இருக்கும்(1.1 litre engine க்கு 54bhp மிகவும் குறைவு)


மாருதியின் WagonR,ஹுண்டாயின் Santro வுக்கு இந்த வண்டி கடுமையான போட்டியினை தருமென நினைக்கிறேன்.

முதல் இந்திய அலைபேசி...

முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று அலைபேசிகளை சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறது. புது தில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Intex Technologies (India) Ltd தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது.

ரூ.2000 முதல் ரூ.8000 வரையிலான விலையில் மூன்று மாடல்களை சந்தைபடுத்தியிருக்கிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் Disney குழுமத்தை சேர்ந்த Buena Vista Internet Group செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி இந்த அலைபேசிகளில் டிஸ்னி நிறுவன கார்ட்டூன் பாத்திரங்களும்,ரிங்டோன் முதலானவற்றுடன் சந்தைக்கு வருமென தெரிகிறது.

AURA I1224 Gold/Black


ரூ.7990 விலையுள்ள இந்த அலைபேசியின் மேலதிக விவரங்களை இங்கே பார்க்கலாம்.


Infi Mobile


ரூ.5450 விலையில் வரும் இந்த மாடலின் மேலதிக விவரங்கள் இங்கே...


King Mobile


ரூ.2050 விலையில் கிடைக்கும் இந்த அலைபேசியின் மற்ற விவரங்கள் இங்கே....


ஆரம்பத்தில் வட இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட இருக்கும் இந்த அலைபேசிகள் நாளாவட்டத்தில் இந்தியா முழுமைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி வர்த்தகத்தினை எதிர்ப்பாக்கும் இந்த நிறுவனம் 2010 ல் முதல் ஐந்து அலைபேசி நிறுவனங்களில் ஒன்றாக மாறுமென நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனமொன்றை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையென்றே நினைக்கிறேன்....நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....பின்னூட்டுங்கள் நண்பர்களே....

ரூ.25000 பரிசு வெல்ல....


The Smart Manager என்கிற மேலாண்மை இதழும், TCS ம் இனைந்து இந்த போட்டியினை அறிவித்துள்ளனர். அதாவது ஒவ்வொரு இதழிலும் ஏதாவது ஒரு நிறுவனத்தின் profile, history போன்றவற்றை அளித்து அதற்கான தீர்வே போட்டியாகும்.

ஆர்வமுள்ளோர் யாரும் அந்த Case studyக்கான தீர்வினை 500 வார்த்தைகளில் எழுதி போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த தீர்வு போட்டியாளரின் புகைப்படத்தோடு அவர்களின் இதழில் பிரசுரிக்கப்படும். பரிசாக ரூ.25,000 மற்றும் ஓராண்டிற்கான The Smart Managerக்கான சந்தாவும் வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்களும், மேலாண்மை துறை பற்றி உபயோகமான தகவல்கள்,நுட்பங்கள்,நுணுக்கங்களை அறியவிரும்புவோர் இந்த தளத்தினை பார்க்கவும்.

Google தொலைபேசி



கூகிள் நிறுவனம் அநேகமாக இந்த வருட இறுதிக்குள் மேலே கண்ட தொலைபேசியினை சந்தைக்கு கொண்டுவரும் என தெரிகிறது.முதல் கட்டமாக 1 மில்லியன் தொலைபேசிகள் சந்தைக்கு வருமென தெரிகிறது.

தைவானை சேர்ந்த HTC நிறுவனம் கூகிளுக்காக இந்த தொலைபேசியினை தயாரிக்கிறது. துவக்கத்தில் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப் பட்ட பின்னரே இவை அமெரிக்க சந்தையை எட்டிப் பார்க்குமென தெரிகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் GPS தொழில்நுட்பம் இந்த தொலைபேசிகளில் இருக்காது என தெரிகிறது.EDGE, 3G Platform சப்போர்ட் பண்ணுமென தெரிகிறது.Gmail and Google Search போன்றவற்றுடன் வரும் இந்த தொலைபேசி நமது சந்தைகளை எப்போது எட்டுமென தெரியவில்லை.

டாடாவின் 1 லட்சரூபாய் கார்?

இனையத்தில் கிடைத்த படங்கள் இவை....ரத்தன் டாடாவின் கணவு ப்ராஜெக்ட் ஆன ஒரு லட்ச ரூபாய் காரின் படங்களாக இருக்கலாமென என தெரிகிறது, இருப்பினும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் 'TATA Indiva' என்கிற பெயரில் இதே மாதிரியான கார் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.......தகவல் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே...!


Chevrolet Spark - புது கார்



ஜெனரல் மோட்டார்ஸ் 'SPARK' என்கிற சிறியவகை கார் ஒன்றினை இந்திய சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது.புதிய கார் என்று சொல்வதைக் காட்டிலும் Remake Car என்றே சொல்லலாம்.

இந்திய சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த daewoo matiz வகை காரின் இஞ்சினை கொண்டே இந்த வாகனம் சந்தைக்கு வந்திருக்கிறது.(சமீபத்தில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்திய Zen estilo வில் WagonR ன் இஞ்சின்தான் பொறுத்தப்பட்டுள்ளது.).

உலகம் முழுவதும் இரண்டு மில்லியன் Spark கார்கள் விற்கப்பட்ட பின்னரே இந்திய சந்தையை எட்டிப் பார்த்திருக்கிறது.ஆரம்பத்தில் இரண்டு பெட்ரோல் மாடல்கள் அறிமுகப்படுத்தி இருந்தலும் கிடைக்கும் வரவேற்பினை பொறுத்து டீசலில் இயங்கும் மாடல் விற்பனைக்கு வரலாம்.

முதல் வகையானது மாருதி800 ஐ குறிவைத்து கொண்டுவரப்படுகிறது. "795cc, 6valve-Smaller engine will pump out 38KW and torque of 68.6 Nm@4600 rpm,five-speed manual transmission driving the front wheels, the three-cylinder unit claims to give a mileage of 19.2kpl with a top speed of 142 km/hr".இதன் விலை சுமார் 3.10 லட்சம் ஆக இருக்கும்.

அடுத்த வகையானது 'Maruti Zen estilo', 'Hyundai Santro' க்கு போட்டியாக அமையும்."The 995cc, 8valve engine pumps out 48.5KW and gives a maximum torque of 87.3Nm.Chevrolet claims fuel figure as 17.85kpl with a top speed of 156Km/hr".இதன் விலை ரூ.3.90 லட்சம் வரை இருக்குமென தெரிகிறது.

"Definitely a superior package from General Motors, especially 0.8L(795cc) spark is much much superior to Maruti 800 in terms of design, safety, engine and comfort(You can avail the estilo type comfort at Maruti 800 price).1L(995cc) spark will also give sleepless nights to Maruti alto, zen estilo and Hyundai Santro."